மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தயாரிப்புப் பணியில் பி.இ.எல். நிறுவனம் தீவிரம்
பெங்களூர்:
நாளொன்றுக்கு 1,500 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களைபி.இ.எல். நிறுவனம் தயாரித்து வருகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவைநடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பாரத் எலெக்ட்ரானிஸ் நிறுவனத்திடம் (பி.இ.எல்.) வாக்குப்பதிவுஇயந்திரங்களை செய்து தரும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந் நிறுவனத்தின் பெங்களூர் கிளை ரூ.2,600 கோடி மதிப்பில் 4.47 லட்சம் வாக்குப்பதிவுஇயந்திரங்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளது. இன்னும் 60,000 இயந்திரங்களை தயாரிக்க வேண்டியுள்ளது.
அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இயவ்திரங்கள் தயாரிப்புப் பணியில் பி.இ.எல். தீவிரமாகஇறங்கியுள்ளது. நாளொன்றுக்கு 1,500 வீதம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகஅந் நிறுவனத்தின் ஏற்றுமதிப் பிரிவு மேலாளர் சிம்ஹா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காஷ்மீர் போன்ற குளிர் பிரேதேரங்களிலும், ராஜஸ்தான் போன்ற அதிக வெப்பநிலை நிலவும் இடங்களிலும்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான முறையில் வேலை செய்கின்றனவா என்பதைக் கடுமையானபரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்படுகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications