9ம் தேதி திமுக வேட்பாளர்கள் அறிமுகம்: 15 முதல் கருணாநிதி பிரசாரம்
சென்னை:
சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் மார்ச் 9ம் தேதி திமுக பொதுக் கூட்டம் நடக்கிறது. அப்போது அக் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 15 பேரும் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.
இதையடுத்து கருணாநிதியின் முதல் கட்டப் பிரசாரம் 15ம் தேதி தொடங்குகிறது. வழக்கம்போல் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை அவர் தொடங்கவுள்ளார். அங்கு பொதுக் கூட்டத்திலும் பேசும் கருணாநிதி, பின்னர் செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை செல்கிறார். அன்று இரவு திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
16ம் தேதி செங்கம், பர்கூர், கிருஷ்ணகி செல்லும் கருணாநதி, கிருஷ்ணகியில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
17ம் தேதி தளி மற்றும் ஓசூரில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு கருணாநிதி பிரசாரம் செய்ய உள்ளார்.
நேரத்தின் அருமை கருதி கருணாநிதிக்கு மாலை அணிவிப்பது, சால்வை அணிவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு காலத்தை வீணடிக்க வேண்டாம் என திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கான வேட்பாளர்களுக்கு கருணாநிதி பிரச்சாரம் செய்யும்போது அக் கட்சிகளின் தலைவர்களும் உடனிருப்பார்கள்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications