தலித்களிடம் ஒற்றுமை இல்லை: வி.ஆர்.கிருஷ்ணய்யர் வருத்தம்
சென்னை:
தலித் மக்களிடையே ஒற்றுமை இல்லாமல், சிதறிக் கிடக்கிறார்கள். இதனால்தான் அவர்களது உரிமைகளைமுழுமையாக அடைய முடியாமல் தவித்து வருகிறார்கள் என்று முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும்மனித உரிமைப் போராளியுமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறினார்.
டாக்டர் அம்பேத்கர் அகாடமி மற்றும் மக்கள் கல்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து பாபா சாஹேப்அம்பேத்கர் விருதை நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு வழங்கின. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில்முன்னாள் மிசோரம் மாநில ஆளுநர் ஏ.பத்மநாபன் விருதை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பேசுகையில், சமூகத்தில் மிகப் பெரிய அளவில் உள்ள தலித் மக்களுக்குஅரசியல், சமுதாய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இன்னும் அவர்கள் ஒடுக்கப்பட்டே கிடக்கிறார்கள். அவர்களதுஓட்டுக்களைப் பெற்றுக் கொண்டு ஓரம் கட்டி வருகிறார்கள் அரசியல்வாதிகள்.
தங்களது நிலையை உணர்ந்து, ஜாதி உட் பிரிவுகளை மறந்து, அரசியல் வேறுபாடுகளை மறந்து, அனைத்து தலித்மக்களும் ஒன்றிணைந்து, தங்களது சமுதாய உரிமைகளுக்காக பெரும் புரட்சியை நடத்த முன்வர வேண்டும்.அப்போதுதான் அவர்களது சுய மரியாதை காப்பாற்றப்படும்.
தங்களுக்கு மற்றவர்களைப் போன்ற உரிமைகள் கிடைக்காது என்ற எண்ணத்தை முதலில் தலித் மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த மாயையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
ஒற்றுமை இல்லாததால்தான் பலவீனமாக இருக்கிறார்கள். அத்தோடு அரசுகளும் அவர்களை ஒடுக்கியேவைத்துள்ளது. ஒன்று சேர்ந்து உரக்கக் குரல் கொடுத்துப் பாருங்கள். உங்களது உரிமைகள் தானாக வந்து சேரும்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை திறந்தாகி விட்டது. பிறகு எப்படி இந்திய அடையாளம் இங்கு இருக்கும்?நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடும் மிகப் பெரிய மோசடி இது என்று கவலையுடன் பேசினார்கிருஷ்ணய்யர்.












Click it and Unblock the Notifications