அத்வானியின் ரத யாத்திரையில் பங்கேற்க ஜெயலலிதா மறுப்பு!
டெல்லி & சென்னை:
துணைப் பிரதமர் அத்வானியுடனான பஸ்-ரத யாத்திரையில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா மறுத்துவிட்டதார்.
தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஆதரவு அலை ஏதும் இல்லாத நிலையில், ஏற்கனவே சிறுபான்மையினரையும் பகைத்துக்கொண்டுவிட்டதால் இந்த ரத யாத்திரையில் பங்கேற்க ஜெயலலிதா முன் வரவில்லை என்று தெரிகிறது.
மேலும் திமுக தலைவர் கருணாநிதியும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பா.ஜ.கவை தமிழர் விரோத,திராவிட இன விரோதிகளாக மிகக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இவர்களோடு ராமதாசும் சேர்ந்துபா.ஜ.கவை திராவிட உணர்வுகளுக்கு எதிரி என்று பேச ஆரம்பித்துள்ளார்.
அத்வானி-ஜெயலலிதா-காஞ்சி சங்கராச்சாரியார் கூட்டணியை தாக்கி இவர்கள் பேசி வருகின்றனர். இந் நிலையில்அத்வானியின் ரத யாத்திரையில் பங்கேற்றால் அது தனக்கு எதிரானதாகவே அமையும் ஜெயலலிதா கருதுகிறார்.
இதனால் வரும் 10ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கும் அத்வானியின் யாத்திரையில்பங்கேற்பதில்லை என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்துள்ளார். இது தொடர்பாக பா.ஜ.க வைத்த கோரிக்கையைஅவர் நிராகரித்துவிட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
துவக்க நிகழ்ச்சிலாவது பங்கேற்குமாறு அத்வானியே ஜெயலலிதாவிடம் தொலைபேசியில் கோரியதாதாகவும்,ஆனால் தனது பிரச்சாரத் திட்டம் வகுக்கப்பட்டுவிட்டதால் அதில் இனி மாறுதல் செய்ய முடியாது என்றும்ஜெயலலிதா பதிலுக்கு கடிதம் அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கோபிச்செட்டிப்பாளையம், கிருஷ்ணகிரி ஆகிய அதிமுக போட்டியிடும் தொகுதிகளில்அத்வானியின் ரதம் செல்லும்போதாவது உடன் வருமாறு ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது.அதையும் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையே அத்வானியின் ரத யாத்திரைக்காக சொகுசு பஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. "Hi-bandwidth dedicated microwave lines" மூலமாக அந்த பஸ்சில் தொலைத் தொடர்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பஸ் பயணிக்கும்போதே அவரால் பேக்ஸ் அனுப்பவும், பெறவும் முடியும். கம்ப்யூட்டர்களில் பிரெளஸ்செய்யவும் முடியும். டிவி, குளியல் அறை, வரவேற்பறை, சமையல் அறை, ஏ.சி, படுக்கையறை, ஒலிப்பெருக்கிகள்என அனைத்து வசதிகளும் இந்த பஸ்சில் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
பட்டனை அழுத்தினால் பஸ்சின் மேல் கூரையின் ஒரு பகுதி திறக்கும், அதன் வழியாக மேடை பஸ்சுக்குள் இருந்துவெளியே வரும். அதில் நின்றவாறு அத்வானியால் மக்களைப் பார்த்து பேச முடியும். மேடையை நோக்கிவெளிச்சம் பாய்ச்சும் போகஸ் லைட்டுகளும் பொறுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் இருந்து புறப்பட்டுவிட்ட அந்த பஸ் கன்னியாகுமரிக்கு 8ம் தேதியே வந்து சேர்ந்துவிடும். 10ம் தேதிகாலை 11.45 மணிக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்ட பின் இந்த பஸ்-ரத யாத்திரையை அத்வானிதொடங்குகிறார்.
கன்னியாகுமரியில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தின் எதிரே கொடியசைத்து யாத்திரையை பா.ஜ.க. தலைவர்வெங்கைய்யா நாயுடு துவக்கி வைக்கிறார்.
இந்த யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு தரப்படவுள்ளது. ரதத்தின் முன்னும் பின்னுமாக அத்வானியின் கமாண்டோபடையினர் கார்களில் வருவர். பஸ்சிலும் ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் உடனிருப்பர். இந்த பஸ் செல்லும்வழியில் வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலழிக்கச் செய்யும் பாம் ஸ்குவாட் படைகளும் முன்னால் செல்வர்.
தமிழகத்தில் அத்வானியின் ரதத்துடன் நூற்றுக்கணக்கான கார்களில் அணி வகுத்துச் செல்வது என பா..ஜ.கவினர்திட்டமிட்டுள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் அத்வானிக்கு சிறப்பான வரவேற்பளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications