காலம் பார்த்து கழுத்தை அறுத்தார்கள்: திமுக, பா.ம.க, மதிமுக மீது பா.ஜ.க. பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காலம் பார்த்து கழுத்தை அறுத்த திமுக, பா.ம.க, மதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என பா.ஜ.க. தலைவர்ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அத்வானியின் ரத யாத்திரையால் மீண்டும் மதக் கலவரம் வெடிக்கும் என்று எதிர்க் கட்சிகள் பிரச்சனைகிளப்புகின்றன.

உண்மையில் குஜராத்தில் நடந்த கலவரத்தைப் போல மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்க காங்கிரசார்முயல்கிறார்கள். காங்கிரசின் இந்தத் திட்டம் பலிக்காது. மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவோடு பிரதமர் வாஜ்பாய் இணைந்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு வருகிறோம்என்றார்.

அடுத்த பிரதமராக வருவதற்காகவே அத்வானி ரதயாத்திரை நடத்துகிறாரா என்று நிருபர்கள் கேட்டபோது,

வாஜ்பாயை முன்னிருத்தி தான் நாங்கள் பிரசசாரம் செய்கிறோம். வாஜ்பாயா அல்லது சோனியாவா என்பது தான்கேள்வி. இதில் தேவையில்லாமல் அத்வானியை இழுத்துவிட்டு கட்சியில் பிளவு இருப்பது போல மாயையைஏற்படுத்த முயற்சி நடக்கிறது.

உண்மையில் பிளவு இருப்பது காங்கிரசில் தான். அரசியலுக்கு பிரியங்கா வரக் கூடாது, ராகுல் தான் வர வேண்டும்என்று சோனியா நினைக்கிறார். இதனால் கோஷ்டிப் பூசலே சோனியாவிடம் தான் தொடங்கிறது என்றார்.

வாணியம்பாடி இடைத் தேர்தலில் திமுகவின் சார்பில் முஸ்லீம் வேட்பாளர் நின்றதால் ஆதரிக்கவில்லைஎன்றீர்கள்ே, இப்போது தென் சென்னையில் அதிமுக சார்பில் முஸ்லீம் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளாரே என்றுகேட்டபோது,

வாணியம்பாடியில் எங்களிடம் திமுக ஆதரவு கேட்கவில்லை. ஆனால், அதிமுகவுடன் இப்போது கூட்டணிஅமைத்துள்ள நாங்கள் 40 தொகுதிகளிலும் வெல்ல பாடுபடுவோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், எங்களுடன் மூன்று முறை கூட்டணி வைத்தது திமுக. ஆனால், பா.ஜ.கவுடன்கூட்டணியே வைக்கவில்லை என்று கருணாநிதி பேசுகிறார். எதையும் நொடியில் மறந்துவிடக் கூடியவர் அவர்.நாங்கள் பலமான கூட்டணி அமைத்துவிட்டதால் கருணாநிதி குழம்பிப் போயிருக்கிறார்.

ராமதாஸ் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பெயர் போனவர். விடுதலைப் புலிகளையே ஆதரிக்க மாட்டோம் எனறுவைகோ கூற வேண்டும். அப்போது தான் அவரை ஆதரிப்போம். பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு கூட்டணியைவிட்டு வெளியே வந்து காலம் பார்த்து கழுத்தை அறுத்தவர்கள் தான் திமுக, மதிமுக, பா.ம.கவினர்.

அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார் ராதாகிருஷ்ணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+