மருமகனுடன் உல்லாசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மருமகனுடன் உல்லாசமாக இருந்த தாயை கண்டித்த மகளை அந்தத் தாயே எரித்துக் கொல்ல முயன்றார். இந்தஅசிங்கம் நடந்தேறியிருப்பது சென்னையில்.

சென்னை கே.கே.நகர் எல்.ஜ.ஜி. குடியிருப்பில் வசித்து வருபவர் உதயகுமார். இவரது மனைவி கல்யாணி.திருமணம் ஆகி 9 ஆண்டுகளாகியும் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. கல்யாணியின் அக்கா கெளரி இளம்வயதிலேயே விதவையாகிவிட்டார். அவருக்கு கவிதா என்ற மகள் உள்ளார். இதையடுத்து கெளரியை, கல்யாணிதனது கணவனுக்கே இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்தார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். கெளரி வாரப் பத்திரிக்கை ஒன்றில் கம்ப்யூட்டர் பிரிவில் வேலைபார்த்து வந்தார். இந் நிலையில் 15 வயதே ஆன தனது மகள் கவிதவை தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும்ரிச்சர்ட் செல்வக்குமார் (32) என்பவருக்கு கெளரி திருமணம் செய்து வைத்தார். இந்தத் திருமணத்துக்குஉதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தும் பலனில்லை.

திருமணத்துக்குப் பின் தனது தாய்க்கும், கணவர் ரிச்சர்டுக்கும் தவறான உறவு இருந்ததை ஒரு நாள் கவிதா நேரில்பார்த்திருக்கிறார். இதைக் கண்டித்தபோது, இதற்காகத்தான் செல்வக்குமாரை உனக்கு திருமணம் முடித்து வைத்தேன்என்று கெளரி வாய் கூசாமல் கூறியிருக்கிறார்.

இதைக் கண்டித்த உதயகுமாருக்கு கெளரி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். தனிக்குடித்தனம் போனால்கணவர் திருந்த வாய்ப்புண்டு என்று கருதி கவிதா பெரம்பூருக்கு குடியேறினார்.

ஆனால் அங்கேயும் இந்த முறைகேடான உறவு தொடர்ந்திருக்கிறது. இதைப் பொறுக்காத கவிதா மீண்டும் ஒருமுறை தாய் கெளரியை எச்சரித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த கெளரி கவிதாவை மண்ணெண்ணைய்ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சித்திருக்கிறார்.

படுகாயத்துடன் உயிர் தப்பிய கவிதா இது தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுதார்.

போலீஸார் கைது செய்ய வருவதற்கு முன் கெளரியும், ரிச்சர்டும் முன்ஜாமீன் பெற்று தப்பிவிட்டனர். இவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+