இயக்கத்தில் பிளவா?: விடுதலைப் புலிகள் மறுப்பு
கொழும்பு:
விடுதலைப்புலிகள் இயக்கதில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகளை அந்த அமைப்பு மறுத்துள்ளது.
புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பகுதி தளபதியான கருணா என்ற முரளிதரன் தனியே செயல்பட ஆரம்பித்துள்ளதாகசெய்திகள் வருகின்றன. ஆனால், இதை புலிகள் இயக்கம் மறுத்துள்ளது.
புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மனின் உத்தரவால் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்கடந்த திங்கள்கிழமை இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் கருணா அதிருப்தியுடன் இருப்பதாகவும், இதனால் தான்அவர் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதாகவும் இலங்கை போலீஸ்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், பிரபாகரனின் தலைமையில், அவரது கட்டுப்பாட்டின் கீழ் கருணா தொடர்ந்து இயங்கி வருவதாக புலிகள்இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. இயக்கத்தில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை என்றும், மக்களிடையேகலக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்தச் செய்தி பரப்பப்பட்டு வருவதாக கருணாவின் செய்தித் தொடர்பாளர்கூறியதாக புலிகளுக்கு நெருக்கமான இன்டர்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில், பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், தங்களை தனிப் பிரிவாகக் கருதும்படியும், இனி தங்களிடமே அமைதிப் பேச்சுவார்த்தையைநடத்த வேண்டும் எனவும் நார்வே அமைதிக் குழுவினரிடம் கருணா தனது தூதர் மூலம் தெரிவித்துள்ளதாகஇலங்கை அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் நாட்டின் வட பகுதியில் உள்ள தனது ஆதரவுப் படைகளை கிழக்குப் பகுதிக்குக் கொண்டு வர ராணுவத்தின்உதவியை கருணா கோரியுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
புலிகள் அமைப்பில் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் கருணா. இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள்முன்பு மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் கருணாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாவின் இந்த அறிவிப்பையடுத்து, நார்வே தூதுக்குழு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன்அவசர ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர், அமைதிக்கண்காணிப்புக் குழு அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் புலிகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதையடுத்து நார்வே குழுவினர் டிரான்ட் புருஹாவ்டே தலைமையில் கிழிநொச்சிக்கு விரைந்தனர். அங்குபுலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுடன் அவர்கள் பேச்சு நடத்தினர். இதன் பின்னர் புலிகளின்இன்டர்நெட் தளத்தில் பேட்டியளித்துள்ள தமிழ்ச்செல்வன், இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தாற்காலிகமானதுதான். விரைவில் இதற்கு தீர்வு காணப்பட்டுவிடும் என்று கூறியுள்ளார்.
புலிகளின் மட்டக்களப்பு-அம்பாரை சிறப்பு கமாண்டரான ரமேஷ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்பிரிவுத் தலைவர் கெளசல்யன் ஆகியோர் பிரபாகரனுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தமிழ்ச்செல்வன்கூறியுள்ளார்.
இது குறித்து அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அரசியல் செய்தித் தொடர்பாளரான மங்கல சமரவீரா கூறுகையில்,புலிகள் இயக்கத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அது பெரிய அளவிலான பிளவுஇல்லை. இதனால் அமைதி முயற்சிகளுக்கு பிரச்சனை வராது. புலிகள் இயக்க என்று நம்புகிறோம் என்றார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் செய்தித் தொடர்பாளரான ஜி.எல். பெரிஸ் கூறுகையில், புலிகள் இயக்கத்தின்உள் விஷயங்கள் குறித்து கருத்து ஏதும் கூற முடியாது. இது சிறிய விவகாரம் தான். இதனால் போர் நிறுத்தஒப்பந்ததுக்கு எந்த பிரச்சனையும் வராது. மேற்கொண்டு இந்த விவகாரம் குறித்து தேவையில்லாமல் பேசுவதுசரியல்ல என்றார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications