அத்வானி ரத யாத்திரைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
துணைப் பிரதமர் அத்வானி வரும் 10ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கவுள்ள ரத யாத்திரைக்குத்தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சென்னையைச் சேர்ந்த வீரராகவன் என்ற வழக்கறிஞர் இந்த பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,பாரத் உதய் யாத்ரா என்ற பெயரில் துணைப் பிரதமர் அத்வானி தேர்தலையொட்டி ரத யாத்திரைமேற்கொள்ளவுள்ளார்.
கடந்த 1990ம் ஆண்டு இதே அத்வானி அயோத்திப் பிரச்சினையின்போது மேற்கொண்ட ரத யாத்திரையையேஇது நினைவுபடுத்துகிறது. மேலும், அத்வானியின் ரத யாத்திரையினால் சமூக மோதல்கள், மத மோதல்கள் ஏற்படவாய்ப்புண்டு. மக்களின் மனதில் தேவையில்லாத பீதியும் ஏற்படும்.
மக்களைச் சென்றடைய எத்தனையோ வழிகள் உள்ளன. பொது அமைதியை குலைக்கும் வகையில் ரத யாத்திரைநடத்தித்தான் மக்களிடம் தங்களது கருத்துக்களைக் கூற வேண்டும் என்பதில்லை.
அத்வாயின் யாத்திரை மத நல்லிணக்கத்தை குலைத்து விடும் என்பதால் இந்த யாத்திரைக்குத் தடை விதிக்க மாநிலஉள்துறை அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சண்முகம் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் மதனகோபால்ராவ் அத்வானியின் யாத்திரை அமைதியானதுதான். இதில் தலையிட தேர்தல் கமிஷனே மறுத்துவிட்டது எனறார்,
மாநில அரசின் வழக்கறிஞர் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் என்.ஆர்.சந்திரன் பேசுகையில்,அத்வானி மேற்கொள்ளும் ரத யாத்திரைக்கு டி.ஜி.பி. அனுமதி தந்திருக்கிறார். உளவுத்துறையின்அறிக்கை பெறப்பட்டுவிட்டது. யாத்திரை அமைதியானது தான். காவல்துறையும், அரசும் உரியபாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், வீரராகவனின் மனுவைத் தள்ளுபடி செய்தனர். இந்த விவகாரத்தில்நீதிமன்றம் தலையிட முடியாது. அந்தப் பொறுப்பு மாநில அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்குமே உண்டுஎன தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக வீரராகவன்கூறியுள்ளார்.
அத்வானியின் ரத யாத்திரைக்கு தடை விதிக்க தேர்தல் ஆணையமும் மறுத்துவிட்டது. மத மோதல்களைஉருவாக்கும் வகையில் அத்வானி பேசினால் ஒழிய இந்த யாத்திரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதுஎன்று கமிஷன் கூறியுள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications