திமுகவிலிருந்து ஆலடி அருணா சஸ்பெண்ட்!
சென்னை:
பா.ஜ.கவில் இணையத் திட்டமிட்டுள்ள திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஆலடி அருணாதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்த ஆலடி அருணா, 1987ம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படையைஅப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அனுப்பியதை, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கண்டிக்காததால், அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறினார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் திமுகவில் முழுமையாக இணைந்தார். கடந்த திமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராகஇருந்தார். திமுக செய்தித் தொடர்பாளராகவும் இருந்தவர். கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தஅவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
சமீப காலமாக அவர் கட்சியில் ஒதுக்கப்பட்டு வந்தார். அவரது கருத்துக்களுக்கு திமுகவில் மதிப்பு இல்லாமல் போகவேவிரக்தியில் இருந்த அவர் அரசியலில் ஈடுபடாமல் புத்தகங்களை எழுதத் தொடங்கினார். சில மாதங்களுக்கு முன்பு காமராஜர்குறித்த வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட அவர் அதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனைஅழைத்திருந்தார்.
கருணாநிதிக்கும், ஆர்.வெங்கட்ராமனுக்கும் எப்போதுமே ஒத்துவராது என்று தெரிந்தும் அவரை ஆலடி அருணா கூப்பிட்டு விழாநடத்தியது திமுக தலைமையை ஆத்திரமடையச் செய்தது.
இந் நிலையில், கிடைக்காது என்று தெரிந்தும் கூட, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடதனக்கு வாய்ப்பு கேட்டார். ஆனால், கருணாநிதி அவருக்கு சீட் தரவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த அவர் தமிழக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணனுடன் டெல்லி சென்று துணைப் பிரதமர்அத்வானியை சந்தித்தார். பின்னர் பிரதமர் வாஜ்பாயையும் சந்தித்தார்.
பா.ஜ.கவில் அவரைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வட சென்னை தொகுதியில் போட்டியிட அவர் சீட்கேட்பதாகத் தெரிகிறது. இதனால் அவரை இன்னும் கட்சியில் சேர்க்கவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக அருணா அறிவித்துள்ளார்.
இந் நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், சட்டதிட்டங்களை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக ஆலடி அருணா கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாகதெரிவித்துள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications