திமுக என்றால் எட்டிக் காயா? பத்திரிக்கைகளுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
வாரிசுகள், வழித் தோன்றல்களை திமுக மட்டுமே ஊக்குவிப்பதாகக் கூறி பத்திரிக்கைகள் கேலிச் சித்திரங்கள்வரைவதாகவும், வசை மொழி பாடுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: முன்பு சுப்பராயன் மத்திய அமைச்சராக இருந்தபோதும், அதன்பின்னர் அவரது மகன் மோகன் குமாரமங்கலம் அமைச்சரானபோதும், அவரது மகன் ரங்கராஜன் குமாரமங்கலம்அமைச்சரானபோதும் அதை பெருமையாகக் கூறினார்கள், புகழ் மொழி பேசினார்கள்.
இப்போது சுப்பராயனின் பேத்தி லலிதா குமாரமங்கலம் பா.ஜ.கவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதையும் பெருமையாக கூறிக் கொள்கிறார்கள்.
அதேபோல வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் பா.ஜ.கவில் சேர்ந்ததையும், கர்நாடகத்தில்பங்காரப்பாவும், அவரது மகன் குமார் பங்காரப்பாவும் பா.ஜ.க.வில் சேரப் போவதையும் பெருமையாகக் கூறிவருகிறார்கள்.
ஆனால் திமுகவில் மட்டும் வழித் தோன்றல்கள் உருவானால் அதை விமர்சித்தும், வசை மொழி பாடியும் கிண்டல்செய்கிறார்கள், கேலிச் சித்திரங்கள் வரைந்து வசை மொழி வாந்தி எடுக்கிறார்கள். பா.ஜ.க. என்றால் இவர்களுக்குஇனிப்பாகவும், திமுக என்றால் எட்டிக் காயாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications