இலங்கை விவகாரம்: பிரபாகரனுக்கு கருணா கடிதம்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கருணா தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கப் பிரிவுடன் எந்தவிதமான பாதுகாப்பு உடன்படிக்கையும்செய்து கொள்ள மாட்டோம் என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

மட்டக்களப்பில் நடந்த சில அரசியல் கொலைகள் தொடர்பாக புலிகள் இயக்க உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டுஅம்மனுக்கும், கிழக்குப் பகுதி புலிகளின் கமாண்டரான கருணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டுள்ளது.

இதனால் தனது ஆதரவு படைகளுடன் கருணா தனியாக செயல்பட ஆரம்பித்துள்ளதாகவும், தங்களுடன் இலங்கைஅரசு தனியே பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஆனால், அதை புலிகள் மறுத்துள்ளனர். சிறிய கருத்து வேறுபாடு உள்ளதாகவும், தாற்காலிகமான இந்த விவகாரம்விரைவில் தீர்க்கப்பட்டுவிடும் என்றும் அந்த அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நார்வே அமைதிக் குழுவினர் நேற்று புலிகளின் பிரதிநிதிகளை கிழிநொச்சியில்சந்தித்துப் பேசினர். அவர்கள் கொழும்பில் இருந்து கிழிநொச்சி செல்ல இலங்கை ராணுவம் தனது ஹெலிகாப்டரைவழங்கியது.

இந் நிலையில் இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளர் சிரில் ஹெராத் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,

இலங்கை ராணுவ கமாண்டர்கள் மூலமாக கருணா எங்களைத் தொடர்பு கொண்டார். அப்போது தன்னுடன் தனியேஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கோரினார். ஆனால், இதற்கு ராணுவ அதிகாரிகள் எதிர்ப்புத்தெரிவித்துளளனர்.

கருணா தரப்புடன் எந்தவித உடன்படிக்கையிலும் அரசு கையெழுத்திடாது. பிரபாகரனுக்கும் பிரதமர் ரணிலுக்கும்இடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. அப்படி இருக்கையில் அதே தரப்பைச் சேர்ந்தஇன்னொருவருடன் எப்படி உடன்பாடு செய்ய முடியும்?

இப்போதைக்கு இரு தரப்பினருமே அமைதி உடன்பாட்டை மதித்து நடப்பதாக உறுதியளித்துள்ளனர். இன்றையசூழலில் எந்த பிரச்சனைக்கும் நாங்கள் தயாராக இல்லை. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதாமல் இருக்கவேண்டும் என்றார் சிரில்.

பிரபாகரனுக்கு கருணா கடிதம்?:

இதற்கிடையே புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு கருணா ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அதில் உங்கள்தலைமையிலை விட்டு விலக மாட்டோம். ஆனால், கிழக்குப் பகுதியில் சுயமாக செயல்பட தயவு செய்து அனுமதிதாருங்கள். உங்களை எந்தக் காலத்திலும் நாங்கள் எதிர்க்க மாட்டோம். மக்களின் உணர்வுகளை உங்களுக்குத்தெரிவிக்காமல் இருந்தால் அது வரலாற்றுக் குற்றமாகிவிடும். அதை நான் செய்ய விரும்பவில்லை. நம்போராளிகளின் உணர்வுகளையே நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

கிழக்கு மட்டக்களப்பில் தனி நிர்வாகம் தேவை. இங்குள்ள மக்களின் உணர்வுகளை மதித்து உங்கள் தலைமையில்நான் சுயமாக செயல்பட அனுமதிக்கவும். இப் பகுதியிலேயே போராடி இப் பகுதி மக்களின் காலடியில் மரிப்பதேஎன் லட்சியம்.

புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தவோ, அதில் வேறு யாரும் தலையிடவோ நான் விரும்பவில்லை என கருணாகூறியிருப்பதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+