கருணாநிதி ஒரு சர்வாதிகாரி: ஆலடி அருணா கடும் தாக்கு!
சென்னை:
கருணாநிதி ஒரு சர்வாதிகாரி. திகவில் தனது வாரிசுகளை மட்டுமே ஆதரிக்கும் மனம் படைத்தவர் என்றுபா.ஜ.கவில் சேரப் போகும் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த அருணா, பல காலமாக கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.இந் நிலையில், தனது நாடார் சமூகத்தினர் நிறைந்த திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருப்பம் தெரிவித்தார்.
ஆனால், அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. எண்கெளன்டரில் இறந்த வெங்கடேச பண்ணையாரின் மனைவிராதிகா செல்விக்கு சீட் கொடுக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த ஆலடி அருணா டெல்லி பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்துப் பேடினார். தமிழகத்தில்தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அருணாவை கட்சியிலிருந்து திமுக நீக்கியது.
இந் நிலையில் சென்னை திரும்பிய அருணா நிருபர்களிடம் பேசுகையில்,
இது எதிர்பார்த்த ஒன்றுதான். கண்டிப்பாக நீக்கத்தான் செய்வார்கள். ஆனால் எப்படி நீக்கியுள்ளார்கள்? என்னிடம்விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பவில்லை, எனது விளக்கத்தை கேட்கவே அவர்கள் விரும்பவில்லை.
ஜனநாயக முறைப்படி, கட்சியின் விதிப்படி எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால்அவர்களுக்குத்தான் ஜனநாயகத்தின் மீதோ, ஜனநாயகக் கோட்பாடுகளின் மீதோ நம்பிக்கையே இல்லையே,பிறகு எப்படி ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்பார்கள்?
கருணாநிதி ஒரு சர்வாதிகாரி. தனது குடும்பத்தினரை மட்டுமே கட்சியில் வளர்க்க நினைப்பார். வேறு யாரையும்வளர அனுமதிக்க மாட்டார், விட மாட்டார். இதை திமுக தொண்டர்களுக்கு சரியான முறையில் புரிய வைக்கவேண்டும்.
1950ம் ஆண்டிலிருந்து திராவிட இயக்கத்தில் இருந்து வருகிறேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின்கொள்கைகளை கடைப்பிடிப்பவன் நான்.
வாஜ்பாய் ஒரு இந்தியர். அவரையே பிரதமராக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிவேட்பாளர்களை ஆதரிக்க முடிவு செய்தேன். வாஜ்பாயை ஆதரிக்கும் எந்தக் கட்சியின் வேட்பாளருக்காகவும்பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன். அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி அல்லதுமதிமுகவாக இருந்தாலும் சரி.
திருச்செந்தூர் தொகுதி எனக்குக் கிடைக்காததால்தான் திமுகவுக்கு எதிராக மாறினேன் என்று கூறுவதில்உண்மையில்லை.
உண்மையில் திருச்செந்தூர் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த யாருக்கும் டிக்கெட் கொடுக்கப்படவில்லை. கருணாநிதிகூறுவது போல, வெங்கடேச பண்ணையாரோ அல்லது அவரது மனைவி ராதிகாவோ திமுகவில் உறுப்பினர்களாகஇருந்தது இல்லை என்றார் ஆலடி அருணா.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications