அமைச்சர் இன்பத் தமிழனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு
சென்னை:
திமுகவினர் மீதான வழக்கில் சாட்சி சொல்ல வராத, விளையாட்டுத் துறை அமைச்சர் இன்பத் தமிழனை மார்ச் 10ம் தேதிக்குள்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலின்போது கள்ள ஓட்டுப் போடமுயன்றதாக கூறி திமுகவினர் மீது இன்பத்தமிழன் போலீஸாரிடம் புகார் தந்தார்.
இதையடுத்து திமுகவினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கில் புகார் கொடுத்தவர் என்ற அடிப்படையில், அமைச்சர் இன்பத் தமிழன் உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகிசாட்சியம் அளிக்குமாறு சைதை நீதிபதி ஆறுமுகம் நான்கு முறை சம்மன் அனுப்பினார்.
ஆனால், அமைச்சர் இன்பத் தமிழன் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்து வருகிறார்.
இதையடுத்து வரும் 10ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இன்பத்தமிழனுக்கு நீதிபதி ஆறுமுகம் வாரண்ட் பிறப்பித்துள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கும்உத்தரவிட்டுள்ளார்.
தாமரைக்கனியின் மகனான இன்பத்தமிழன் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் போட்டியிட்டு திமுக சார்பில்போட்டியிட்ட தந்தையைத் தோற்கடித்தார். இதனால் அமைச்சராக்கப்பட்டவர் இன்பத் தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடும் தொகுதியின் அதிமுக வேட்பாளருக்கான பொறுப்பாளராகஇன்பத்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கெளண்டர் செய்யும் பொறுப்பை தாமரைக்கனியிடம் திமுகவும், மதிமுகவும்ஒப்படைத்துள்ளன.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications