இன்று மகாமகம்: கும்பகோணத்தில் 20 லட்சம் பேர் புனித நீராடல் !
கும்பகோணம்:
கும்பகோணம் மகாமகத்தின் முக்கியமான, கடைசி நாள் நிகழ்ச்சியான தீர்த்தவாரி பெருவிழா இன்று நடக்கிறது. சுமார் 20 லட்சம்பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்து மகாமகக் குளத்தில் புனித நீராடினர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல்நேற்று வரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந் நிலையில் இன்று மகாமகத்தின் மிக முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நடைபெற்றது.இன்று காலை 10.24 முதல் பகல் 12.16மணி வரையிலுமான காலகட்டத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்று மகாமக குளத்தில் புனித நீராடலாம் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று அதிகாலை முதலே கும்பகோணத்தில் பக்தர்கள் குவிந்தனர். காலையில் காஞ்சி சங்கராச்சாரியார், மதுரைஆதீனம், திருப்பானந்தால், திருவாடுதுறை, தர்மாபுரம் மடங்களின் மடாதிபதிகள் புனித நீராடினர். தொடர்ந்து பிற பக்தர்களும்நீராடி வருகின்றனர். இன்று மட்டும் 20 லட்சம் பேர் அங்கு கூடினர்.
இதையடுத்து 30,000 பேர் கொண்ட குழுக் குழுவாக பக்தர்களைப் பிரித்த போலீசார் அவர்களை அணி, அணி குளத்தில் நீராடச்செய்தனர். ஒவ்வொரு அணிக்கும் நீராட 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது.
சிவபெருமானைப் போற்றி ஓதுவார்கள் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி கும்பகோணம் நகரம் முழுவதும் சுமார் 19,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறப்பு ரயில்கள், ஆயிரக்கணக்கான பேருந்துகள் மூலம் தமிழகத்தின் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள்கும்பகோணதில் குவிந்துள்ளனர்.
மகாமகத்தின் 10ம் நாள், இறுதி நிகழ்ச்சியான தீர்த்தவாரியை ஒட்டி, கும்பகோணத்தில் அமைந்துள்ள நாட்டின் ஒரே பிரம்மன்ஆலயத்தில் இன்று பிரம்மோற்சவமும் நடந்தது. கும்பகோணத்தில் உள்ள 12 சிவத் தலங்களின் மூலவர்களும், 5 வைணவத்தலங்களின் மூலவர்களும் மகாமகக் குளத்துக்குக் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.
மகம் நட்சத்திரம் உருவானதாகக் கருதப்படும் நல்லூர் சப்த சாகர தீர்த்தத்திலும் பக்தர்கள் புனித நீராடினர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெளர்மணி தினத்தில் குருபகவான் சிம்மராசிக்கு வரும் நிகழ்ச்சியே மகாமகமாககொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மகாமக தீர்த்தவாரி நடந்தபோது கருடனும் குளத்தைச் சுற்றிப் பறந்தது. இதனால் பக்தர்கள்தங்களுக்கு பெருமாளின் ஆசிர்வாதமும் கிடைத்ததாய் பெருமகிழ்ச்சியடைந்து ஆனந்தப் பரவசமடைந்தனர்.
மகாமகம் திருவிழா இன்று இரவுடன் முடிவுக்கு வருகிறது.
கடந்த மகாமகத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் பலியானதால், இந்த முறை கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறுசிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவைக் காண கூட்டம்முண்டியடித்ததில் தான் நெரிசல் ஏற்பட்டு சாவுகள் நடந்தன. இதனால் இம்முறை ஜெயலலிதா மகாமகத்துக்கு வரவில்லை.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications