போலி முத்திரைத் தாள்: சென்னையில் மேலும் 2 பேர் கைது
சென்னை:
சென்னை தாம்பரத்தில் போலி முத்திரைத்தாள் விற்றதாக மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவையே உலுக்கிய போலி முத்திரைத் தாள் விவகாரம் தொடர்பாக ஆங்காங்கே பலர் கைதாகி வருகின்றனர்.சென்னையில் நிஜாமுதீன், ஆண்டாளம்மா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நிஜாமூதீனை கர்நாடக போலீசாரும், மற்ற இருவரையும் ஆந்திர போலீசாரும் கைது செய்தனர். தமிழக சிபிசிஐடி போலீசார்இவர்களைத் தப்ப விட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நிஜாமூனை தப்ப வைக்க லட்சக்கணக்கில் லஞ்சமும்வாங்கியுள்ளனர் போலீசார்.
இந்த விஷயம் வெளியானதில் இருந்து தமிழக போலீசார் மீது நெருக்குதல் அதிகரித்துள்ளது. இந் நிலையில் சென்னைப் புறநகர்ப்பகுதியான தாம்பரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே முத்திரைத் தாள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜன், ராமச்சந்திரன் ஆகிய2 பேரை தாம்பரம் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள வணிகவளாகத்திலேயே போலி முத்திரைத்தாள்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இவர்களுக்கும் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் கூட தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி முத்திரைத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த இருவரும், வண்டலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடமிருந்து இந்த முத்திரைத் தாள்களை வாங்கி விற்றதாகபோலீஸாடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ராஜேந்திரனைப் பிடிக்கவும் வலை வீசப்பட்டுள்ளது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications