ராவ் தான் அடுத்த பிரதமர்!
மதுரை:
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பி.வி.நரசிம்மராவ் தலைமையில் புதிய அரசு ஆட்சியமைக்கும் என்று ஜனதாக் கட்சித்தலைவர் சுப்ரமணியசுவாமி கூறியுள்ளார்.
அதிரடி அறிவிப்புகளையும், தடாலடி செய்திகளையும், புருடாக்களையும் வாரி வழங்குவதில் புகழ் பெற்ற சுப்ரமணிய சுவாமிவரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடயை ஆதரவும் இன்றி மதுரையில் தனித்துப் போட்டியிடுகிறார்.
மதுரை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்தியில் சோனியாவோ அல்லது வாஜ்பாயோ மீண்டும் பிரதமராக வரமாட்டார்கள். ஆனால் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான நரசிம்மராவ் தான் அடுத்த பிரமதர், அவர்தான்ஆட்சியும் அமைப்பார்.
நரசிம்மராவைப் பிரதமர் பதவியில் அமர்த்துவதில், மதச்சார்பற்ற கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும். இதில் எந்த சந்தேகம்இல்லை.
எங்களால் இந்தியா ஒளிர்கிறது என்று பா.ஜ.க. கூறிக் கொள்வதில் நியாயமே இல்லை. உண்மையில் இந்த பாராட்டுக்கு உரியவர்நரசிம்மராவ்தான். அவரது பதவிக் காலத்தின்போதுதான், பொருளாதார சீர்திருத்தம், வளர்ச்சிக்கு அடித்தளம் போடப்பட்டது.அந்த நன்றிக்குரியவர் ராவ் மட்டும்தான்.
ராவ் காலத்தில் போடப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை ஆட்டிப் பார்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறதுவாஜ்பாய் அரசு. நாட்டில் இப்போது பொருளாதார முடக்கம் நிலவுகிறது.
பத்தாயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் வைத்துக் கொண்டு, 12,000 ரூபாய் கடன் வைத்துள்ளவன் நிலையில் இப்போதுவாஜ்பாய் அரசு உள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வெறும் 5.3 சதவீதம்தான். ஆனால் 8 சதவீதத்திற்கு பக்கத்தில் இருப்பதாக புருடாவிட்டுக் கொண்டுள்ளனர் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர்.
சோனியா காந்தி கடந்த காலத்தை மறந்து விட்டு திமுக, மதிமுக, பாமகவுடன் கைகுலுக்குகிறார்.
பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தையே மறந்து விட்டார் அவர் என்றார் சுவாமி.
மதுரையில் எப்போது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, மதுரை எனக்கு ரொம்பப் பழக்கமானது.புதிய ஊர் அல்ல, மக்களும் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள். எனவே பார்மலாக பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும்என்பதில்லை. இருந்தாலும், 20ம் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளேன் என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications