தேர்தல் பிரச்சாரம் செய்ய வைகோவுக்கு அனுமதி: நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதில்லை
சென்னை:
தேர்தல் பிரச்சாரம் செய்ய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பொடா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதற்கு வசதியாக வரும் மே மாதம் 9ம் தேதி வரை அவர் விசாரணைக்காக தினமும், நேரில் ஆஜராக வேண்டிதில்லை என்றும்பொடா நீதிமன்றம் சலுகை வழங்கியுள்ளது.
பூந்தமல்லியில் உள்ள இந்த நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் வைகோவுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் தளர்த்தியது. ஆனாலும், வழக்கு விசாரணைக்காக தினந்தோறும் பொடா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
இந் நிலையில் தனக்கு தேர்தல் பணிகள் இருப்பதால், தினமும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரி பொடாநீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன்,
வரும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய வசதியாகதினமும் ஆஜராவதில் இருந்து வைகோ விலக்கு கோரியுள்ளார். வைகோவின் கோரிக்கையில் உள்ள நம்பகத்தன்மையைநீதிமன்றம் ஏற்கிறது.
தனக்குப் பதிலாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தவறாது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்ற வைகோவின்உறுதிமொழியையும் நீதிமன்றம் ஏற்கிறது.
இதனால் அவருக்கு வரும் மே 9ம் தேதி வரை வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 10ம் தேதிமுதல் அவர் தினமும் ஆஜராக வேண்டும்.
அதே நேரத்தில், இடையிலேயே சில நேங்களில் விசாரணைக்காக வைகோ ஆஜராவது அவசியம் என்று நீதிமன்றம் கருதிஉத்தரவு பிறப்பித்தால் அவர் நேரில் வர வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 10ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications