அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: சோனியா மீது கடும் தாக்கு!
சென்னை:
அதிமுக வெளியிட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு வந்தால்இந்தியாவுக்கே பெரும் ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமானஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்தில் வெளியிட்டார். கட்சியின் அவைத் தலைவரும்,நிதியமைச்சருமான பொன்னையன் அதைப் பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையில், சோனியா காந்தியையும், திமுக, மதிமுக, பா.ம.க. கட்சிகளையும் கடுமையாகச் சாடியுள்ளதுஅதிமுக. சோனியா காந்தி இந்தியப் பிரதமர் ஆனால் நாட்டையே அடமானம் வைத்து விடுவார் என்றுகடுமையாகக் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையின் சில பகுதிகள்:
மண்ணின் மைந்தர், சுத்தமான இந்தியக் குடிமகன் வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சியமைக்க அதிமுகதீவிரமாக பாடுபடும்.
வாஜ்பாய் தலைமையில் இந்தியாவை வலிமை வாய்ந்த, பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்த நாடாக உலகஅரங்கில் உருவாக்க அதிமுக பாடுபடும்.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசு அமைய அதிமுக உறுதுணையாகஇருக்கும்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முப்படைத் தளபதிகள்ஆகியோர் இந்தியாவிலேயே பிறந்தவர்களாக இருந்தால்தான் நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும்இருக்காது.
இத்தாலியில் பிறந்த திருமதி அந்தோணியா மைனோ சோனியா, ராஜீவ் காந்தியைத் திருமணம் செய்து கொண்டு16 ஆண்டு காலம் வரை இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்காமல் இருந்தார். இந்தியக் குடியுரிமை பெற அவர்விரும்பவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்றதால், வேறு வழியின்றி, இந்தியக் குடியுரிமைக்குஒப்புக் கொண்டார்.
இந்தியராகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாதவர் சோனியா. அவர் இந்தியப் பிரதமர் ஆனால்நாட்டின் பாதுகாப்பு என்னவாகும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தியர் என்றே கூறிக் கொள்ள விரும்பாத சோனியாவுடன் சிலர் கூட்டணி அமைத்துள்ளனர். அவர்களும்சாதாரணமானவர்கள் அல்லர். உலகப் பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் விடுதலைப்புலிகளுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் அவர்கள். இத்தனை பேரும் ஒன்று சேர்ந்து கைகுலுக்குவதைப்பார்த்தால், நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, ஒருமைப்பாடு குறித்து பலத்த சந்தேகம் எழுகிறது.
தனது கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு திமுக, மதிமுக, பா.ம.கதான் காரணம் என்று கூறிக் கொண்டிருந்தசோனியா, இப்போது பதவிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியைஅமைத்துள்ளார். கொள்கையற்ற இந்தக் கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றுஅதிமுகவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.












Click it and Unblock the Notifications