சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் "விளையாடிய" டாக்டர் கைது
மதுரை:
சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கு மயக்க ஊசி போட்டுக் கற்பழிப்பது, அவர்களை நிர்வாணப்படுத்தி புகைப்படம்எடுப்பது என செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட ரயில்வே டாக்டரை மதுரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜகோபால். இவரது மனைவி லட்சுமி தேவியும்ஒரு டாக்டர்தான். மதுரை ரயில்வே மருத்துவமனையில் டாக்டர் ராஜகோபால் பணியாற்றி வருகிறார்.
இந் நிலையில் ராஜகோபால் மீது பரிமளா என்ற பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில்,டாக்டரிடம் சிகிச்சை பெறச் சென்ற தன்னை அவர் மயக்க ஊசி போட்டுக் கற்பழித்து விட்டதாகவும், தன்னைஆபாசமாகப் புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுபோல பல பெண்களிடம்டாக்டர் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி ஆதாரமாக பல்வேறு புகைப்படங்களையும் கொடுத்தார்பரிமளா.
பரிமளா கொடுத்த புகைப்படங்களில் பல பெண்களை மயக்க நலையில் நிர்வாணப்படுத்தி டாக்டர் புகைப்படம்எடுத்திருந்தது தெரியவந்தது. டாக்டரும், பல பெண்களுடன் காட்சி தருகிறார்.
இதையடுத்து டாக்டர் ராஜகோபால் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதை அறிந்த டாக்டர்ராஜகோபால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை நீதிபதி ஏ.கே.ராஜன்தள்ளுபடி செய்து விட்டார்.இதையடுத்து டாக்டர் ராஜகோபாலை போலீஸார் தேடத் தொடங்கினர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அவர் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸார்விரைந்து சென்று ராஜகோபாலைக் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டபோது இன்டர்நெட்டில் பெண்களின் ஆபாசப்படங்களைவெளியிட்டதும், ஆபாச விசிடிக்களை புழக்கத்தில் விட்டதும் தெரிய வந்து தமிழகமே பரபரப்பில் ஆழ்ந்தது.அதேபோல, டாக்டர் ராஜகோபால் விஷயத்திலும் பல விஷயங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications