மக்களை ஏமாற்றுகிறது திமுக: அதிமுக குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவின் நலனைக் கொஞ்சம் கூட மனதில் கொள்ளாமல், சுயநல நோக்கத்துடன் பல்வேறு கொள்கைகளைமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் வகுத்ததாக அதிமுக தேர்தல் அறிக்கையில் கடுமையாகக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். அதில் திமுக, மதிமுக, பா.ம.க. ஆகியகட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயலலிதா. குறிப்பாக திமுக கடும் விமர்சனத்திற்குஆளாகியுள்ளது.

மறைந்த முரசொலி மாறனும் இந்த விமர்சனத்திலிருந்து தப்பவில்லை. தமிழக நலனுக்கு எதிராக முரசொலி மாறன்செயல்பட்டதாகக் கூறி அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளது அதிமுக.

திமுக குறித்த விமர்சனத்தின் ஒரு பகுதி: முரசொலி மாறன், மக்கள் விரோத கொள்கைகளை கடைப்பிடித்து வந்தார்.அவரது கொள்கைகள் எதுவுமே இந்தியாவுக்கு சாதகமாகவோ அல்லது இந்தியாவின் தனித் தன்மையைக் காக்கும்விதமாகவே இருந்ததில்லை.

அவரது சுயநலக் கொள்கைகளால், விவசாய உற்பத்தி மையங்கள், விவசாயப் பணியாளர்கள் மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு, முரசொலி மாறன் வர்த்தக அமைச்சராக இருந்தபோது, இலங்கையிலிருந்துதேயிலையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மிகவும் குறைந்த வரி விகிதம்விதிக்கப்பட்டது.

இதனால் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டனர். உற்பத்தி பாதிக்கப்பட்டு வறுமைக்குத் தள்ளப்பட்டார்கள்.

அதேபோல, இன்னொரு திமுக அமைச்சரான டி.ஆர்.பாலு, நீலகிரி மாவட்டம் பைக்காரா மின் உற்பத்தித்திட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் தனது மக்கள் விரோதப் புத்தியைக் காட்டினார். முதலமைச்சருக்கு எதிரானதனது விரோத மனப்பான்மையைக் காட்டும் வகையில், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் பல்வேறுதடங்கல்களை ஏற்படுத்தினார்.

மத்திய அரசை விட்டு திமுக வெளியேறிய பிறகுதான் இந்தத் திட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.

மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளது திமுக. மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நேர் மாறாக, தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களுக்காகவும்,தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கவும் எண்ணற்ற நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்துவருகிறது, எதிர்காலத்திலும் இது தொடரும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில், காவிரி நீர் பிரச்சினை குறித்தும் கூறப்பட்டுள்ளது.கர்நாடகம் காவிரி நீரைத் திறந்து விட மத்திய அரசை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும் என்று அதில்கூறப்பட்டுள்ளது. அத்தோடு நதி நீர் இணைப்பை விரைந்து மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழை செம்மொழியாக அறிவிக்கவும், ஆட்சி மொழியாக அறிவிக்கவும் மத்திய அரசை அதிமுகதொடர்ந்து வலியுறுத்தும். மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடாத கூட்டாட்சி முறை உருவாக சட்டத்திருத்தம் கொண்ட வரவும், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சட்டமாக்கவும் அதிமுகபாடுபடும என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+