முன் ஜாமீன் கோரி நடிகர் சரத்குமார் மனு
சென்னை:
காசோலை திரும்பி வந்த வழக்கில் சென்னை நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது நடவடிக்கையிலிருந்துதப்பிப்பதற்காக முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் நடிகர் சரத்குமார்.
நடிகர் சரத்குமார் தனக்கு கொடுத்த ரூ. 30 லட்சத்திற்கான காசோலை திரும்பி வந்து விட்டதாகக் கூறி ரமேஷ்என்பவர் சரத்குமார் மீது சென்னை சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்தவழக்கில் கடந்த 3ம் தேதி சரத்குமாருக்குக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி சரத்குமார் மனுத் தாக்கல் செய்துள்ளார். தனதுமனுவில், ரமேஷ் என்பவர் நான் கையெழுத்திட்ட காசோலையை எனக்குத் தெரியாமல் எடுத்து, பெரியஅளவிலான தொகையை நிரப்பி மோசடி செய்துள்ளார்.
என்னிடம் முன்பு வேலை பார்த்தவர்களில் யாரோ ஒருவர் இந்த காசோலையை என்னிடமிருந்து திருடி,ரமேஷுக்குக் கொடுத்து உதவியுள்ளனர்.
எனக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தவறான வழிகளைப் பயன்படுத்தி கைது வாரண்ட் உத்தரவைப்பெற்றுள்ளார் ரமேஷ் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
சரத்குமார் ரூ. 30 லட்சம் பணத்தைக் கொடுத்து விட்டால் தனது புகாரை வாபஸ் பெறுவதாகக் கடந்த ஆண்டு மார்ச்மாதம் ரமேஷ் கூறியிருந்தார். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சரத்குமாருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications