நாளை தொடங்குகிறது ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தை தனக்கு ராசியான நம்பரான 9ம் தேதி (நாளை) தொடங்குகிறார்.
மெரீனா கடற்கரைச் சாலையில் உள்ள பெசன்ட் சாலை சந்திப்பில், ஐஸ் ஹவுஸ் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புஅருகே பிற்பகல் 3 மணிக்கு தனது பிரச்சாரத்தை அவர் துவக்குகிறார். மத்திய சென்னை அதிமுக வேட்பாளர்பாலகங்காவுக்கு ஆதரவாக அவரது முதல் பிரச்சாரம் அமையும்.
இதைத் தொடர்ந்து தனது கான்வெண்ட் பள்ளித் தோழியும் தென் சென்னை வேட்பாளருமான பதர் சையதுக்குஆதரவாக சத்யா ஸ்டுடியோ, மத்திய கைலாஷ், கிண்டி ரயில் நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம்ஆகிய பகுதிகளில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்.
இதையடுத்து செங்கல்பட்டு செல்லும் ஜெயலலிதா அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மதுராந்தகம் செல்கிறார்.அங்கு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் 33வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
இதற்காக மதுராந்தகம் தேரடி வீதியில் மாபெரும் பொதுக் கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடக்கும் இடங்களில் எல்லாமே கூட்டம் கூட்டுவதற்காகலட்சுமண்-சுருதி உள்ளிட்ட பல்வேறு இசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் மே மாதம் 8ம் தேதி வரை பல கட்டமாக ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய உள்ளார்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?










Click it and Unblock the Notifications