தமிழகத்தில் பொடா துஷ்பிரயோகம்: உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லி:
வைகோ, நக்கீரன் கோபால் மீதான வழக்குகளை விசாரிக்க பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு அதிகாரமில்லைஎன்று கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துளளது.
வைகோ, நக்கீரன் கோபால் மீதான வழக்குகள் தொடர்பான ஆவணங்களைக் கேட்டு தமிழக அரசுக்கு பொடா மறுஆய்வுக் குழு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்தும், இந்த பொடா வழக்குகள் மீதான விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருவதால்இதில் மறு ஆய்வுக் குழு தலையிட முடியாது என்று கூறியும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது. இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதனை நீதிபதி வரியவா,நீதிபதி சேமா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வந்தது.
கடந்த பிப்ரவரி 17ம் தேதி தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் ஒரு உத்தரவைப்பிறப்பித்தனர். அதன்படி வைகோ, கோபால் மீதான பொடா வழக்குகள் குறித்து மறு ஆய்வுக் குழு தொடந்துவிசாரிக்கலாம். ஆனால், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது நாங்கள் தீர்ப்பு வழங்கும் வரை பொடா மறுஆய்வுக் குழுவும் கோபால், வைகோ விஷயத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.
இந் நிலையில் தமிழக அரசின் மனு மீது இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அவர்கள் கூறியதாவது:
தனிப்பட்ட மனிதர்கள் மீது பொடா போன்ற மிகக் கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது சரியாஎன்பதை ஆராயவே பொடா மறு ஆய்வுக் கமிட்டி அமைக்கப்பட்டது. இதனால் வைகோ, நக்கீரன் கோபால்ஆகியோர் மீது இச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது சரியா என்பது குறித்து விசாரிக்க மறு ஆய்வுக்குழுவுக்கு முழு உரிமை உண்டு.
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது என்றனர் நீதிபதிகள்.
இதையடுத்து வைகோ, கோபால் மீது பொடா வழக்குகள் போடப்பட்டது சரியா, இல்லையா என்பது குறித்து மறுஆய்வுக் குழு தீர்ப்பு வழங்க வழி ஏற்பட்டுள்ளது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது











Click it and Unblock the Notifications