ரத யாத்திரை: கேரள இல்லத்தை பயன்படுத்த அத்வானிக்கு அனுமதி மறுப்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் உள்ள தனது கேரள விருந்தினர் இல்லத்தில் இருந்து அத்வானியின் ரத யாத்திரையைத்தொடங்க கேரள அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனால் ரோட்டில் இருந்தே இந்த யாத்திரை தொடங்குகிறது.
இந்தியா ஒளிர்கிறது என்ற பெயரில் அத்வானி ரத யாத்திரை நடத்தவுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும்கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருந்தாலும் ரத யாத்திரை நிச்சயம் நடக்கும் என்று அத்வானியும், பா.ஜ.கவும்திட்டவட்டமாக கூறிவிட்டன.
நாளை மறுதினம் முதல் (10ம் தேதி) இந்த யாத்திரை தொடங்குகிறது. கன்னியாகுமரியில் உள்ள கேரள விருந்தினர்இல்லத்தில் இருந்து யாத்திரையை தொடங்க அத்வானி திட்டமிட்டிருந்தார்.
இதை கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு கொடி அசைத்து துவக்கி வைக்கவுள்ளார்.
இந் நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில் அரசு இல்லத்தை பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தமுடியாது என்ற தேர்தல் கமிஷனியை விதியை சுட்டிக் காட்டியுள்ள கேரள காங்கிரஸ் அரசு, யாத்திரையைத் துவக்கதனது விருந்தினர் இல்லத்தை பயன்படுத்த அத்வானிக்குத் தடை விதித்துவிட்டது.
இதையடுத்து கன்னியாகுமரி பீச் ரோட்டில் இருந்து தனது யாத்திரையை அத்வானி துவக்குவார் என பா.ஜ.க.அறிவித்துள்ளது.
இந் நிலையில் கட்சியில் நிலவும் உட்பூசல் காரணமாகவும், சரியான வேட்பாளர்கள் இல்லாததாலும் இதுவரைவேட்பாளர் பட்டிலை இறுதி செய்ய முடியாமல் பா.ஜ.க. தடுமாறிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குமரியில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள்:
இந் நிலையில் அத்வானி மேற்கொள்ளவுள்ள ரத யாத்திரைக்குக் கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்துதமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் விவாதிக்க மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் இன்று சென்னைவந்தனர்.
சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர்கள் கன்னியாகுமரிசெல்கின்றனர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் உள்ளிட்ட ஏற்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
இதற்கிடையே, கோவை வழியாக அத்வானியின் ரத யாத்திரை செல்வதற்கு கோவை இஸ்லாமிய அமைப்புகள்ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே கோவை நகரம் மதக் கலவரங்களைக் கண்டு அந்தப் புண் இன்னும் ஆறாத நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது அமைதியாக உள்ள கோவை நகரில் மதக் கலவரங்கள் மீண்டும் ஏற்பட அத்வானியின் ரதயாத்திரை வழி வகுத்து விடும். எனவே கோவை வழியாக அத்வானி செல்ல தடை விதிக்க வேண்டும் என்றுகோவை மாவட்ட ஹீதாயதுல்லா இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்வானி கோவை வருவதையொட்டி அங்கு மிகக் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எங்குபார்த்தாலும் போலீஸ் தலைகளாகவே காணப்படுகிறது. நகரின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் போலீஸ்சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதே போல கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் வழியாக அத்வானியின் ரதம் செல்வதால், அங்கும் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் அத்வானி பேசினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம் மாநிலமுதல்வர் ஏ.கே. ஆண்டனி எச்சரித்துள்ளார்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications