அத்வானியின் ரத யாத்திரை தொடங்கியது
கன்னியாகுமரி:
துணைப் பிரதமர் அத்வானி தனது ரத யாத்திரையை இன்று கன்னியாகுமரியில் தொடங்கினார்.
இந்தியா ஒளிர்கிறது என்ற பெயரில் கன்னியாகுமரியிலிருந்து அமிர்தசரஸ் வரை ரத யாத்திரை மேற்கொள்கிறார்அத்வானி. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அவர் மேற்கொள்ளும் இந்த யாத்திரை இன்று காலைகன்னியாகுமரியில் தொடங்கியது.
முன்னதாக நேற்றிரவு அத்வானி தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம்கன்னியாகுமரி வந்தார். அவருக்கு பா.ஜ.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் அவரதுமனைவி கமலா அத்வானி, மகள் பிரதீபா, மகன் ஆகியோர் வந்திருந்தனர். பின்னர் தமிழ்நாடு அரசு சுற்றுலாமாளிகையில் அத்வானி நேற்றிரவு தங்கினார்.
இன்று காலை 10.00 மணிக்கு ரதயாத்திரை பொதுக் கூட்ட விழா தொடங்கியது. கன்னியாகுமரி கடற்கரைசாலையில் குண்டு துளைக்காத மேடை போடப்பட்டிருந்தது. திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவேட்பாளர் தாமோதரனை (கன்னியாகுமரி திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்டது) ஆதரித்து அத்வானி பேசினார்.
மேடையைச் சுற்றிலும் 4 அடுக்குப் பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருந்தது. விழாவில் பிரமோத் மகாஜன்,அருண் ஜேட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி, இல.கணேசன், திருநாவுக்கரசர், சி.பி.ராதாகிருஷ்ணன், சுகுமாறன்நம்பியார், விஜயசாந்தி உள்ளிட்ட பா.ஜ.க பிரமுகர்களும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தும் கலந்து கொண்டனர்.
பின்னர் 12 மணியளவில் அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு கொடியசைத்து ரத யாத்திரையைதொடங்கி வைத்தார். அப்போது கைலாஷ் என்ற பாடகர், பாரத் சமக் ரஹா ஹே (இந்தியா ஒளிர்கிறது) என்றபாடலை இந்தியிலும், ஆங்கிலத்திலும் பாட, ரதம் புறப்பட்டது. ரதத்துக்கு முன்னும், பின்னும் போலீஸாரின்பாதுகாப்பு வாகனங்கள் செல்கின்றன. அதற்கடுத்தாக பா.ஜ.க. தலைவர்களின் வாகனங்கள் அணிவகுத்துச்செல்கின்றன.
விவேகானந்தபுரம், கொட்டாரம், சுசீந்தரம் வழியாக நாகர்கோவில் சென்ற இந்த ரத யாத்திரையில் அந்தத்தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து அத்வானி பிரசாரம் செய்தார்.
அதன் பின்னர் தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை ஆகிய இடங்களிலும் பொன். ராதாகிருஷ்ணனைஆதரித்து ரதத்தில் இருந்தபடியே பிரசாரம் செய்தார் அத்வானி. மாலையில் அவரது ரதம் திருவனந்தபுரத்தைஅடைந்தது.
யாத்திரை வெற்றியடைய பிரதமர் வாஜ்பாய் அத்வானிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ரத யாத்தியைை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் யாத்திரை செல்லும்வழியெங்கும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றைபோலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.
கோவையில் மர்ம போன் மிரட்டல்:
இதற்கிடையே கோவைக்கு அத்வானியின் ரத யாத்திரை வரும்போது டூ விலரிலும், சூட்கேசிலும்வைக்கப்பட்டுள்ள குண்டுகள் வெடிக்கும் என்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம டெலிபோன் மிரட்டல்வந்துள்ளது. இதையடுத்து ஏற்கனேவ பலத்த பாதுகாப்பில் இருக்கும் கோவை நகரில் கண்காணிப்பு மேலும்அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளை அத்வானியின் ரத யாத்திரை கோவையை அடைவது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள வ.உ.சி. பூங்காவில்அத்வானி பேசவுள்ளார். இதனால் அப் பகுதியில் யாரும் நுழைய கடந்த 3 நாட்களாகவேஅனுமதிக்கப்படவில்லை.
தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு:
இதற்கிடையே அத்வானியின் ரதயாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லிஉயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி படேல் மற்றும் நீதிபதி அகம்மது ஆகியோர்அடங்கிய பெஞ்ச், தேர்தல் ஆணையம் யாத்திரைக்குத் தடை விதிக்க மறுத்துள்ளது. எனவே, அதில் தலையிட உயர்நீதிமன்றம் விரும்பவில்லை என்று தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications