திருமாவளவனை ஆதரித்து கண்ணப்பன் இன்று பிரச்சாரம்
மங்களூர்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரை ஆதரித்து மக்கள் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரானகண்ணப்பன் இன்று பிரச்சாரம் செய்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம், புதிய நீதிக் கட்சி, இந்திய தேசிய லீக் ஆகியகட்சிகள் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இதில் திருமாவளவன் சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மக்கள் கூட்டணித்தலைவர்கள் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
அந்த வரிசையில், மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவரான எஸ்.கண்ணப்பன் காட்டு மன்னார்குடி, சிதம்பரம்,புவனகிரி, மங்களூர், விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் திருமாவளவனை ஆதரித்து இன்றுபிரச்சாரம் செய்கிறார்.
திருமாவளவன் மாநாட்டுக்கு தடை இல்லை: உயர் நீதிமன்றம்
சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடத்தப்படவுள்ள இந்துத்வா எதிர்ப்பு மாநாட்டுக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த விட்டது.
சேலம் நகரில் மார்ச் 14ம் தேதி இந்துத்வா எதிர்ப்பு மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தவுள்ளது.இந்த மாநாடு நடந்தால், இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படும், கிறிஸ்தவரான திருமாவளவன் இதைநடத்தத் தகுதியற்றவர், எனவே மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்நாகராஜா என்பவர் மனு செய்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பொதுநலன் வழக்கு என்ற பெயரில் அரசியல் தொடர்பான விவகாரங்களை நீதிமன்றங்களுக்குக் கொண்டு வருவதுகண்டனத்துக்குரியது.
அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நமது நீதிமன்ற அமைப்பில் வழியில்லை. எனவே இந்த மனுவைத்தகுதியற்றதாகக் கருதி நிராகரிக்கிறோம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications