இந்தியா ஒளிரவில்லை, வீழ்கிறது!
சென்னை:
இந்தியா ஒளிர்வதாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்கிறது. ஆனால் வறட்சி, குடிநீர் இன்மை, வேலைவாய்ப்பின்மைஆகியவற்றினால் இந்தியா வீழ்ந்து கொண்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக சாடியுள்ளார்.
திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நடந்தது. இதில் திமுக சார்பில்போட்டியிடும் 15 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு, கருணாநிதியிடம் ஆசி பெற்றனர்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், இந்தியா ஒளிர்வதாக மக்கள் பணத்தை கோடி கோடியாக வீணடித்துவிளம்பரம் செய்கிறது பா.ஜ.க. அரசு. ஆனால் உண்மையில் விவசாயத்திற்குத் தண்ணீர் இல்லாமல், குடிப்பதற்குதண்ணீர் இல்லாமல், வறட்சியிலும், வேலை வாய்ப்பின்மையிலும் சிக்கித் தவித்து வருகிறார்கள். இந்தியாஒளிரவில்லை, மாறாக வீழ்ந்து கொண்டுள்ளது.
இந்தியா ஒளிர்கிறது விளம்பரங்கள் மக்களை ஏமாற்றும் வேலையாகும். இந்தியா ஒளிர்கிறது என்ற பெயரில்அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை பா.ஜ.க. அரசு உடனடியாக அகற்ற வேண்டும். தேர்தல் கமிஷன்உத்தரவையும் மீறி இந்த விளம்பரங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளன.
தான் ஒரு இடைக்கால பிரதமர் என்பதையே வாஜ்பாய் மறந்து விட்டார். மக்கள் பணத்தை பாழடித்து இந்தியாஒளிர்கிறது என்ற விளம்பரத்தை அவர் அனுமதித்து வருகிறார். இதன் மூலம் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம்இழைத்து விட்டார் வாஜ்பாய்.
ஒரு அமைச்சர் தவறு செய்தால் பிரதமரிடம் முறையிடலாம். ஆனால் பிரதமரே தவறு செய்தால் யாரை அணுகிகுறை சொல்வது?
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ் அத்துமீறி நடக்கிறார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். சுயஉதவிக் குழுக்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறிபேசியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தபிரச்சினைகளுக்காகத்தான் விருதுநகர் மாநாட்டில் ஆளுநர் பதவியையே ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம்கொண்டுவரப்பட்டது.
காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க. அல்லாத மத்திய அரசை அமைக்கப் போவதாக சட்டசபையில் வீர முழக்கமிட்டஜெயலலிதா இப்போது பா.ஜ.க.வுடன் கை கோர்த்திருப்பது ஏன்?
சோனியா காந்தியை ஜெயலலிதா தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதை அவர் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
மெரீனா கடற்கரையில், கூட்டம் எதுவும் நடத்தக் கூடாது என்று தடை உள்ளது. ஆனால் அதைஜெயலலிதாவுக்காக தளர்த்தி கூட்டம் போட அனுமதித்துள்ளார்கள். எனவே நானும், வருகிற 22ம் தேதிதொடங்கப் போகும் பிரச்சாரப் பயணத்தை ஜெயலலிதா தொடங்கிய அதே இடத்தில் தொடங்கவுள்ளேன்.போலீஸ் அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை நாடுவேன் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கருணாநிதியின் பேரனும், மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனுமான தயாநிதிமாறனும் பேசினார். தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். இதுதான் அவரது முதல்மேடைப் பேச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலடி அருணாவுக்கு கருணாநிதி பதில்
திருச்செந்தூர் தொகுதி கிடைக்காத ஆதங்கத்தில்தான் ஆலடி அருணா திமுகவை விட்டு விலகினார் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாநாட்டில் ஆலடி அருணா பேசும்போது,திமுகவை மதிக்காமல் யாரும் மத்தியில் ஆட்சி நடத்த முடியாது என்று பேசினார். ஆனால் திருச்செந்தூர் தொகுதிஅவருக்குக் கிடைக்காத ஆதங்கத்தில் திமுக மீது தற்போது சேறு வாரி வீசிக் கொண்டிருக்கிறார்.
ஆலடி அருணாவுடனான கூடா நட்பைத் துண்டித்துக் கொள்ள அவரது பேச்சே ஒரு வகையில் தூண்டுதலாகஅமைந்தது.
துருப்பிடித்த ஆணிகளைத் தேடிப்பிடித்து எடுத்து கூர் தீற்றி திமுக மீது எறிந்து கொண்டிருக்கிறார் அருணா என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications