அதிமுக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கையாக்கிய ஏட்டு
சேலம்:
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, சேலத்தைச் சேர்ந்தபோலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் தனது விரல்களை வெட்டி கோயிலில் காணிக்கை செலுத்தியுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் நாக்கை வெட்டுவது, விரலை வெட்டுவது புதிய விஷயமல்ல. பலர் இது போன்றதியாகங்களை செய்துள்ளனர். ஆனால், ஒரு ஏட்டையாவே இந்த அளவுக்கு கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கரிபட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் ரத்னம். இன்று நேற்றிரவுஅயோத்தியாபட்டினம் ராமர் கோயிலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
போலீஸ் யூனிபார்மில் இருந்தபடியே அதிமுகவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். திடீரென தனது கட்டைவிரலையும், இரண்டு நடுவிரல்களையும் அங்கிருந்த அரிவாளை எடுத்து வெட்டினார் ரத்னம். வலியில்துடித்தபடியே முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷமிட்டபடி மயங்கி சரிந்தார்.
சில நொடிகளில் நடந்துவிட்ட இந்தக் கேவலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் பூசாரி உடனடியாகபோலீஸாருக்குத் தகவல் தந்தார்.
இதையடுத்து சக போலீசார் விரைந்து வந்து ரத்னத்தை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை இன்றுகாலை கல்வித்துறை அமைச்சர் செம்மலை மற்றும் உள்ளூர் சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்கள் மருத்துவமனையில்சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
அப்போது ரத்னம் கூறுகையில், அம்மாவுக்காக (ஜெயலலிதா) எந்தத் தியாகத்தையும் செய்வேன். எனது கை விரல்காணிக்கையாகத் தரப் போவது குறித்து ஏற்கனவே லெட்டர் மூலமாக அம்மாவுக்கு தகவல் அனுப்பி விட்டேன்என்றார்.
இதற்கிடையே சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பன்னீர்செல்வம் இந்தச் செயலை வன்மையாகக்கண்டித்துள்ளார்.
அவர் கூறுகையில், போலீஸ்காரரே இத்தகைய மூட நம்பிக்கையின் உச்ச கட்டத்துக்குப் போனால்பொதுமக்களுக்கு எப்படி அவர்கள் மீது நம்பிக்கை வரும். தனது செயலால் காவல் துறையையே ரத்னம்கேலவப்படுத்திவிட்டார். அவரைப் போய் பார்த்து பழம் வாங்கித் தந்ததன் மூலம் அமைச்சர் செம்மலை இந்த மூடநம்பிக்கையை ஆதரிப்பதாகவே தெரிகிறது.
மேலும் முதல்வர் தான் தன்னை அனுப்பி வைத்ததாகவும் செம்மலை கூறியுள்ளார். ஆடு, கோழிகளை கோவிலில்பழியிடவே தடை செய்து அதை போலீஸ் மூலம் தடுத்த முதல்வர் ஜெயலலிதா இப்போது விரலை வெட்டியபோலீஸ்காரருக்கு ஆறுதல் சொல்ல அமைச்சரை அனுப்பியது வேதனைக்குரிய, மட்டமான அரசியல் என்றார்பன்னீர்செல்வம்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications