ஜெயலலிதா ஒரு அரசியல் அரைவேக்காடு: வாசன் தாக்கு
சென்னை& டெல்லி::
ஜெயலலிதா ஒரு அரசியல் அரைவேக்காடு என காங்கிரஸ் தலைவர் வாசன் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்றமே தனது தீர்ப்பில் சோனியா காந்தி இந்தியக் குடிமகள் தான் என்று கூறிவிட்டது. தேர்தலிலும்வென்று அவர் தனக்குள்ள மக்கள் ஆதரவை நிரூபித்துவிட்டார்.
ஆனால், மக்களின் தீர்ப்பையும் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காத ஜெயலலிதா தொடர்ந்து சோனியாவைநாலாம்தரமாக விமர்சித்து வருகிறார். அவரது பேச்சுக்கள் மூலம் முதல்வர் நாற்காலியில் அமரவே ஜெயலலிதாதகுதியில்லாதவர் என்பது தெளிவாகிறது.
அரசியல் அரைவேக்காடான ஜெயலலிதாவுக்கு தேசத்திற்காக உழைத்த ராஜிவ் குடும்பம் குறித்துப் பேச என்னஅருகதை இருக்கிறது?. ஜெயலலிதாவின் வாழ்க்கை முறை பற்றி தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தஇந்தியாவுக்கே தெரியும்.
குடும்பப் பாசம் குறித்து ஜெயலலிதாவிடம் யோசனை கேட்க வேண்டிய நிலையில் சோனியா இல்லை. ஊருக்குஉபதேசம் செய்யும் ஜெயலலிதா தன்னை ஒரு முன் கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொள்வது நல்லது.
ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களுக்குக் கூட கருணை காட்டச் சொல்லி ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியவர்சோனியா, அவரைப் பற்றி பேசவே ஜெயலலிதாவுக்கு தகுதி கிடையாது. அத்வானியுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு சோனியா மீது தாக்குதல் தொடுத்து வருகிறார் ஜெயலலிதா.
ராஜிவ் கொலையில் திமுகவுக்குத் தொடர்பில்லை என்று ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை சொல்லிவிட்டது.ஆனால், இடைக்கால அறிக்கையை சுட்டிக் காட்டியே பேசிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிகா.
நீதிமன்றத்திடம் 3 வருட ஜெயில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு இறுதித் தீர்ப்பில் விடுதலை கிடைத்தது.இடைக்காலத் தீர்ப்புப்படி 3 வருடம் ஜெயிலுக்குப் போக ஜெயலலிதா தயாரா?. இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்குஒரு நீதியா?
வாஜ்பாய், அத்வானியைப் பற்றி ஜெயலலிதா பேசிய கேவலமான பேச்சுக்களை வைத்து ஒரு புத்தகமேபோடலாம். தோல்வி பயத்தில் இருக்கும் ஜெயலலிதா பதவி, பணம், ஆள் பலத்தை வைத்துக் கொண்டுவென்றுவிடலாம் என நினைக்கிறார். அது நடக்காது என்றார் வாசன்.
காங். வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு
இதற்கிடையே காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்பட்டியல் இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர்பிரபுவும், மயிலாடுதுறை தொகுதியில் மணிசங்கர் அய்யரும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications