இன்று கோவை வருகிறது அத்வானியின் ரதம்: போககுவரத்து நிறுத்தம்- போலீஸ் பிடியில் நகரம்
கோவை:
கன்னியாகுமரியில் தொடங்கிய துணைப் பிரதமர் அத்வானியின் ரத யாத்திரை நேற்றிரவு கேரளதுக்குள்நுழைந்தது. இன்று கேரளப் பயணத்தை முடித்துக் கொண்டு மாலையில் அவரது ரதம் கோவை நகருக்குள்நுழைகிறது.
கன்னியாகுமரியில் தொடங்கி நாகர்கோவில், களியக்காவிளை வழியாக கேரளத்தின் தென் கோடி எல்லையில்உள்ள திருவனந்தபுரத்தில் நுழைந்த அத்வானி, இன்று கோட்டயம், கொல்லம் உள்பட அம் மாநிலத்தின் முழுநீளமும் பயணம் செய்து வட கோடியில் உள்ள பாலக்காடு வழியாக இன்று மாலையில் மீண்டும் தமிழக நகரானகோவைக்குள் நுழைகிறார்.
வாலையாறு வழியாக வரும் அவர் மாலையில் கோவை பீளமேடு வ.உ.சி. மைதானத்தில் நடக்கும் பா.ஜ.க. தேர்தல்பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
அத்வானியின் ரத யாத்திரையை முன்னிட்டு, வாலையாறு சோதனைச் சாவடி முதல் வ.உ.சி. மைதானம் வரை பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வ.உ.சி.மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய்களும்தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் போலீஸ்மயமாகவே காணப்படுகிறது. மேலும், அத்வானி வரும் பாதையில் உள்ள உயரமான கட்டடங்களில்தொலைநோக்கிகளுடன் ஆயுதம் தாங்கிய போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுபட்டுள்ளனர்.
இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை வாலையாறுலிருந்து கோவை சாலையில் போக்குவரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொதுக் கூட்டத்திற்குப் பிறகு அத்வானி இன்றிரவு கோவையிலேயே தங்குகிறார். நாளை காலை கிளம்பி திருப்பூர்,தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்கிறார்.
முன்னதாக இன்று காலை கோட்டயத்தில் நிருபர்களிடம் அவர், மக்களவைத் தேர்தலுக்குப் பின் எங்கள் ஆட்சிமீண்டும் அமையும். அப்போது அயோத்திப் பிரச்சனைக்கு முழு தீர்வு காண்போம் என்றார். பா.ஜ.கவின் தேர்தல்அறிக்கையில் அயோத்தி கோவில் கட்டுவது குறித்து குறிப்பிடப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கமறுத்துவிட்டார்.
அதே நேரத்தில் நாட்டில் பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்டத் திருத்தம்மற்றும் பசு வதைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என எங்களைஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தி வருகிறது என்றார் அத்வானி.
வாஜ்பாய்க்குப் பதிலாக உங்களை கட்சியில் முன்னிருத்திக் கொள்ளவே இந்த யாத்திரையைமேற்கொண்டுள்ளீர்களா என்று கேட்டபோது, அதை மறுத்த அத்வானி, அடுத்த பிரதமர் வாஜ்பாய்தான் என்றார்.
கேரளத்தில் பிரச்சாரத்தின்போது பேசிய அத்வானி, இந்த மாநிலம் தான் இந்தியாவிலேயே அதிக படிப்பறிவுகொண்ட மாநிலம். ஆனாலும் வளர்ச்சியில் முடங்கிப் போயுள்ளது. இதற்குக் காரணம் காங்கிரஸ் மற்றும்இடதுசாரிகளின் ஆட்சிதான். இந்த மக்களவைத் தேர்தலில் கேரளத்திலும் தாமரை மலரும் (பா.ஜ.கவின் சின்னம்)என்று நம்புகிறேன்.
எங்கள் கட்சிக்கு அவ்வளவாக வலு இல்லாத தமிழகத்திலும் கேரளத்திலும் எனது யாத்திரைக்கு பெரும் கூட்டம்கூடி வருகிறது என்றார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications