கர்நாடகத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: பா.ஜ.க
சென்னை:
கர்நாடகத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 224 தொகுதிகளிலும் போட்டியிடும். அதிமுகவுடன் கூட்டணிஏற்படுவதற்கான சாத்தியம் ஏற்படவில்லை. அப்படி ஒரு வேளை கூட்டணி ஏற்பட்டாலும், தேர்தலுக்குப்பின்எங்கள் கட்சி ஆட்சியமைத்தால் அந்த அரசில் அதிமுக இடம் பெறாது.
கர்நாடகத்தின் கிருஷ்ணா அரசு போலி முத்திரைத்தாள் வழக்கில் சிக்கியுள்ளது. இங்கு நாங்கள் ஆட்சியமைக்கயார் தயவும் தேவையில்லை. எங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று சொல்லவும் அவசியமில்லை.எங்கள் கட்சியில் தலைவர்களுக்குப் பஞ்சமில்லை என்றார்.
பா.ஜ.கவுக்கு கிருஷ்ணா கண்டனம்
இதற்கிடையே கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பா.ஜ.கவை கடுமையாகத் தாக்கினார்.
செயதியாளர்களிடம் அவர் கூறியதாவது: வீரப்பனைப் பிடிக்க எங்களால் இயலவில்லை என்று பா.ஜ.க. தலைவர்வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார். அவர் கர்நாடக மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்ய சபா எம்.பி.தானே. வீரப்பனைப் பிடிப்பதற்கு அவர் மத்திய அரசு மூலம் என்ன உதவி பெற்றுக் கொடுத்தார்?
வீரப்பனை சுற்றி வளைத்து விட்டோம். கூடிய சீக்கிரம் அவனைப் பிடித்து விடுவோம்.வீரப்பனைப் பிடிக்கவில்லைஎன்ற ஒரே காரணத்துக்காக ஆட்சியைத் தூக்கி பா.ஜ.க. கையில் கொடுத்து விடமுடியாது. மூன்று முறைகர்நாடகத்தில் தோல்வியுற்ற கட்சிதான் பா.ஜ.க. இந்தியா ஒளிர்கிறது என்று அத்வானி ரத யாத்திரை செய்கிறார்.எந்த இடத்தில் ஒளிர்கிறது என்பதைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்? என்றார்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications