சோனியா குறித்த கருத்து: ஜெ. மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?
டெல்லி & புவனேஸ்வர்:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக முதல்வர் ஜெயலலிதா கருத்துத்தெரிவித்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர்டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா சோனியா காந்தி குறித்து கடுமையானகுற்றச்சாட்டுக்களைக் கூறிப் பிரச்சாரம் செய்து வருகிறார். பதி பக்தி, தேச பக்தி இல்லாதவர் சோனியா என்றுகடுமையாகக் கூறியுள்ளார். கணவருக்குத் துரோகம் இழைத்து விட்டதாகவும் சோனியாவை அவர் சாடி வருகிறார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி பேசுகையில்,விரக்தி ஏற்படும்போதெல்லாம் ஜெயலலிதா இப்படித்தான் எதையாவது பேசி வருகிறார். சோனியா குறித்துஜெயலலிதா இப்படிப் பேசுவது முதல் முறையல்ல. இதுதான் அவரது வழக்கம். இதை அப்படியே விட்டுவிடுவதேநல்லது.
இருப்பினும் ஜெயலலிதாவின் பேச்சில் தேர்தல் விதி மீறல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருகிறோம். அப்படிஇருந்தால் தேர்தல் ஆணையத்திடம் நிச்சயம் புகார் கொடுக்கப்படும் என்றார் அம்பிகா சோனி.
ஜெயலலிதா மீதான இந்தப் புகார் குறித்து ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்த தலைமைத் தேர்தல் ஆணையர்டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தின்போது சட்டத்திற்குஉட்பட்டு பேசுவது நல்லது. புகார் கூறப்பட்ட தலைவர்களின் பேச்சில் தேர்தல் நடத்தை விதி மீறல் இருப்பதாகதெரிய வந்தால் உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications