காவிரிக்கு கல்லறை கட்டிய கருணாநிதி: ஜெ. விளாசல்
காஞ்சிபுரம்:
கரிகாலன் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டினான். ஆனால் காவிரி தண்ணீரைக் குடித்து வளர்ந்தகருணாநிதியோ காவிரிக்குக் கல்லறை கட்டி விட்டார் என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
வாலாஜாபாத், கருக்குப்பேட்டை, அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் சாலையோர பிரச்சாரம் செய்த அவர்காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்திலும் பேசினார்.
ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த உரையையே சாலையோரப் பிரச்சாரத்தின்போது படித்த ஜெயலலிதாபொதுக் கூட்டத்தில் அவராகவே பேசினார்.
ஜெயலலிதாவின் அனல் பேச்சு: தமிழகத்தில் ஓட்டு கேட்க சோனியா வருவதற்குத் தகுதியே கிடையாது.கர்நாடகத்தை வலியுறுத்தி, தமிழகத்திற்குக் காவிரி நீரைப் பெற்றுத் தர தவறிய அவர் எப்படி தமிழக மக்களின்ஓட்டுக்களைப் பெற வரலாம்?
தமிழக மக்களுக்காக எந்த நல்ல விஷயத்தையும் செய்ததில்லை சோனியா. தமிழக மக்களின் ஓட்டுக்களைக் கேட்கஅவருக்கு உரிமையே இல்லை.
அதேபோல, காவிரி நீர் விஷயத்தில் தமிழக மக்களுக்கு கருணாநிதியும் துரோகம் இழைத்துள்ளார். சோழ மன்னன்கரிகாலன் அன்று காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டி மக்களுக்கு சேவை செய்தான். ஆனால் அதே காவிரிநீரைக் குடித்து வளர்ந்தவரான கருணாநிதி, கர்நாடகத்திலிருந்து தண்ணீரைப் பெற்றுத் தராமல் காவிரிக்குக் கல்லறைகட்டி விட்டார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒட்டுண்ணிகள். திமுகவின் தயவால் பிழைக்கும் கட்சிகள். சுயசிந்தனையோ, சுய கொள்கையோ இக்கட்சிகளுக்குக் கிடையாது. ஓட்டுக்காக பிழைக்கும் கட்சிகள் இவை என்றார்ஜெயலலிதா.
செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன், ஜெயலலிதா பேசும்போது கை கூப்பியபடிநின்று கொண்டிருந்தார். காஞ்சிபுரம் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்ட ஜெயலலிதா, காவிரிப்பாக்கம்,வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய இடங்களிலும் சாலையோரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications