ஜெவுக்கு எதிராக பிரச்சாரத்தில் இறங்குகிறார் பழ.நெடுமாறன்
ராமநாதபுரம்:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட சென்னை உயர் நீதிமன்றம்அனுமதி வழங்கியுள்ளது.
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், பாவாணன்மற்றும் டாக்டர் தாயப்பன் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தங்களை அனுமதிக்கக் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர் மற்றும் இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர், பழ. நெடுமாறன் உள்ளிட்டமனுதாரர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். இருப்பினும் தங்களது வழக்கு குறித்தும், பொடா சட்டம்குறித்தும், விடுதலைப் புலிகள் குறித்தும் பேசக் கூடாது. தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை தொடர்ந்து பிரச்சாரத்தில்ஈடுபட அனுமதி வழங்கப்படுகிறது.
பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளிக்கவும், பொதுக்கூட்டத்தில் பேசவும் தற்போது அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளஜாமீன் நிபந்தனைகள் தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை அமலில் இருக்காது. பிரச்சாரம் முடிவடைந்த அடுத்த நாள்முதல் தற்போதுள்ள ஜாமீன் நிபந்தனைகள் மீண்டும் அமலுக்கு வரும் என்று உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து நெடுமாறன் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை நீங்கியுள்ளது. திமுக, மதிமுக,பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்யலாம் என்றுதெரிகிறது.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications