ஆம்னி பஸ்கள் சென்னைக்குள் வர தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
சென்னை நகருக்குள் ஆம்னி பஸ்கள் வருவதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை நகருக்குள் ஆம்னி பஸ்கள் வரக் கூடாது என்று தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்தது. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்துதான் பயணிகளைஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் அரசு கூறியது.
இதனை எதிர்த்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதைவிசாரித்த உயர் நீதிமன்றம், ஆம்னி பஸ்கள் சென்னைக்குள் வரலாம் என்று தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கு முடியும்வரைஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேந்திர பாபு மற்றும் நீதிபதி மாத்தூர் அடங்கிய பெஞ்ச் இடைக்காலத் தடைவிதிக்க மறுத்துவிட்டது.
அதே நேரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு ஆம்னி பஸ் உரிமையாளர்சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications