ஜெவின் ஜாதி துவேஷம்: ராமதாஸ் பாய்ச்சல்
கரூர்:
வன்னியர்கள் மீதான தனது ஜாதி துவேஷத்தைக் காட்டி பிற ஜாதியினரின் ஓட்டுக்களைப் பெற முதல்வர்ஜெயலலிதா முயலுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுராந்தகத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது டாக்டர் ராமதாஸ் ஒரு ஜாதி வெறியர் என்று மிகக் கடுமையாகதாக்கிப் பேசியிருந்தார் ஜெயலலிதா. இதற்கு கரூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதில் அளித்தார்ராமதாஸ்.
அவர் பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக ஜாதியை பயன்படுத்துகிறார் ஜெயலலிதா. வன்னியர்கள் மீதானதனது ஜாதி துவேஷத்தை வெளிப்படுத்தி, பிற ஜாதியினரின் ஓட்டுக்களைப் பெற முயலுகிறார்.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காக பா.ம.க.கடுமையாகப் பாடுபட்டுள்ளது. என்னை ஜாதி வெறியன் என்று கூறிய ஜெயலலிதாவுக்கு இந்த சமுதாயத்தினர்நல்ல பாடம் கற்பிப்பார்கள்.
சோனியாவை வெளிநாட்டுப் பெண் என்று இப்போது கூறும் ஜெயலலிதா, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியைக்கவிழ்த்து விட்டு அதே வேகத்தில், சோனியா காந்தியைப் பிரதமராக்க ஆதரவு தருவதாக குடியரசுத் தலைவருக்குகடிதம் எழுதியது ஏன்? அப்போது சோனியா வெளிநாட்டுப் பெண் என்று அவருக்குத் தெரியாதா?
ஜெயலலிதாவுக்கு எதிராக அதிருப்தி அலை தமிழகத்தில் வீசுகிறது. எனவே ஜனநாயக முற்போக்குக் கூட்டணிபாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் என்றார் அவர்.
பின்னர் திண்டிவனம் வந்த அவர் அங்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் தன்ராஜை ஆதரித்துப் பிரசாரம்செய்தார். அவர் பேசுகையில், மிகப் பெரும் வெற்றிக் கூட்டணியை திமுக தலைவர் கருணாநிதி உருவாக்கியுள்ளார்.இந்தக் கூட்டணியை உருவாக்கிய பெருமை அவருக்கே உரித்தானது.
பாமக எம்.பிக்கள் யாரேனும் தவறு செய்வதாக தகவல் வந்தால் உடனடியாக இதுபோல பொதுக் கூட்டம் போட்டுசம்பந்தப்பட்ட எம்.பியை மக்கள் முன் நிறுத்தி விசாரணை நடத்துவேன்.
தேர்தல் முடிந்ததும், தன்ராஜ் உள்ளிட்ட பாமக எம்.பிக்களின் செல்போன் எண்கள் தொகுதி மக்களுக்குத்தெரிவிக்கப்படும். எனது தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்படும். நியாயமான கோரிக்கைகளை எங்களுக்குதொலைபேசி மூலம் தொகுதி மக்கள் தெரிவிக்கலாம் என்றார்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications