ராமநாதபுரம்: "தண்ணி இல்லா காட்டில்" கன மழை!
ராமநாதபுரம்:
குடிநீர்ப் பஞ்சத்தால் அவதிப் பட்டுக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்திடீர் கன மழை பெய்தது.
தண்ணி இல்லாக் காடு என்று மக்களால் "அன்புடன்" அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பாலானபகுதிகளில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடம் தண்ணீர் ரூ. 5 வரை விற்கப்படுகிறது. மழையும்இல்லாததால், விவசாயப் பணிகளும், பாதிக்கப்பட்டு விவசாயிகள் முதல் சாதாரண பொது ஜனம் வரை மிகவும்பாதிப்பில் ஆழ்ந்திருந்தனர்.
கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், சும்மாவே வாடிக் கிடக்கும் ராமநாதபுரம் தண்ணீர்ப் பிரச்சினையில்சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.
இந் நிலையில் திடீர் கன மழை பெய்து ராமநாதபுரம் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது. தொண்டி, கீழக்கரை,திருப்புல்லாணி, நைனார் கோவில், ராமநாதபுரம், ராமேஸ்வரம், தேவிப்பட்டனம் ஆகிய இடங்களில் சுமார்ஒன்றரை மணி நேரம் இந்த கன மழை பெய்தது.
இந்த கன மழையினால் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்து குடிநீர்ப் பிரச்சனை தீரும் என்று மக்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர். மேலும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்அறிவித்துள்ளதால் ராமநாதபுரம் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications