தேர்தல் அறிக்கை வெளியிட்டார் சு.சுவாமி
மதுரை:
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிதேர்தல் அறிக்கையை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
மதுரையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று கூறி முன்பு மதுரை மக்களை மிரட்டியவர் சு. சுவாமி. பல கட்சிகளைஉடைத்த பெருமையும் உடையவர். அதிமுகவின் தயவால் ஒரு முறை எம்.பி. ஆக மதுரை மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இப்போது அரசியல் கட்சிகளால் கைவிடப்பட்டு அரசியல் அனாதை ஆகியுள்ள சு.சுவாமி மதுரை தொகுதியில்போட்டியிடவுள்ளார். தனது அதிரடி பிரச்சாரம் மூலம் மதுரை மக்களின் ஓட்டுக்களைப் பெற்று மீண்டும் எம்.பி.ஆவேன் என்று கூறி வரும் சுவாமி, மதுரையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
வழக்கம் போல மதுரையை சிங்கப்பூராக மாற்றுவேன், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகஉருவாக்க முயற்சிப்பேன் என்ற பல்லவிகள் இந்த தேர்தல் அறிக்கையில் இல்லை.
மாறாக, தூத்துக்குடியை பெருநகரங்களில் உள்ள துறைமுகங்களைப் போல மிகப் பெரிய துறைமுகமாக மாற்றமுயற்சிக்கப் போவதாக சுவாமி கூறியுள்ளார். மேலும் அனைத்துக் குடிமக்களும் பாதுகாப்பான சூழலில் வாழ வகைசெய்யப் போவதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார்.
அரசியலில் சுத்தமான, நேர்மையானவர்களை ஈடுபடுத்த தனது கட்சி பாடுபடும். மதச்சார்பின்மையை முழுவேகத்துடன் நடைமுறைப்படுத்த ஜனதாக் கட்சி பாடுபடும். விவசாயத்துறையை அதி நவீனமாக மாற்றுவோம்என்றும் சுவாமியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
நதிகளை இணைத்து மக்களுக்குக் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தனிநபர் வருமான வரி விதிப்புநீக்கப்படும். ஆசிரியர்களின் ஊதியம் இரட்டிப்பு ஆக்கப்படும். விவசாயிகள் கடனுக்கான வட்டி, கூடுதல் வட்டிஆகியவை நீக்கப்படும். தற்போதைய கல்வி முறை நடைமுறைக்கு சம்பந்தம் இல்லாததாக உள்ளது. இதை முற்றிலும்மாற்றியமைக்க ஜனதாக் கட்சி முயலும். பெண்களின் உரிமைகள், சமூக நீதி ஆகியவற்றிலும் உரிய நியாயம்கிடைக்க ஜனதாக் கட்சி பாடுபடும் என்று கூறுகிறார் சுவாமி.
மேலும், தான் மதுரை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயம்ஆகியவற்றை மிகத் தீவிரமாக அமல்படுத்தப் போவதாகவும், சீனா, இஸ்ரேஸ் ஆகிய நாடுகளுடன் நட்புறவுமேம்படுத்த பாடுபடப் போவதாகவும் சுவாமி உறுதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications