கோவை, பெருந்துறை, ஈரோடு, தர்மபுரியில் அத்வானி தீவிர பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸில் சேர மக்கள் ஆசைப்பட்டார்கள். இன்று அந்த நிலையில் பா.ஜ.கஉள்ளது. பா.ஜ.கவில் சேர அனைத்துத் தரப்பு மக்களும் ஆசையுடன் அலை மோதி வருகிறார்கள் என்று துணைப்பிரதமர் அத்வானி கூறினார்.

கேரளாவில் இருந்து கோவைக்கு தனது பஸ்-ரதத்தில் வந்த அத்வானிக்கு பா.ஜ.கவினர் சிறப்பானவரவேற்பளித்தனர். வழி நெடுகிலும் கூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தவாறே பொதுக் கூட்டம் நடந்தபீளமேடு வ.உ.சி. திடலுக்கு வந்து சேர்ந்தார் அத்வானி.

அங்கு திரளாக கூடியிருந்த பாஜகவினரிடையே அவர் பேசுகையில், அன்னிய நாட்டின் பிடியிலிருந்து நாட்டைமீட்க அன்று காங்கிரஸார் போராடினர், மக்களும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இன்று நிலை மாறியுள்ளது.அன்னிய நாட்டைச் சேர்ந்தவரின் பிடியிலிருந்து காங்கிரஸையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டிய நிலையில்மக்கள் உள்ளனர், காங்கிரஸாரும் உள்ளனர்.

காங்கிரஸுக்கு சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. அந்தக் கட்சியில் சேர மக்கள்ஆசைப்பட்டார்கள். இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. பா.ஜ.கவுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது.காங்கிரஸின் கையில் நாடு சிக்கி விடக் கூடாது என்பதற்காக பா.ஜ.கவில் சேர அனைத்துத் தரப்பினரும் அலைமோதி வருகிறார்கள்.

ஜனசங்கத்தில் நான்,வாஜ்பாய், பைரான் சிங் ஷெகாவத் ஆகிய 3 பேரும் சேர்ந்தபோதும், அதன் பிறகு இப்போது50 ஆண்டுகளாக சேர்ந்து பணியாற்றியதையும் மறக்க முடியாது. எந்தக் கட்சியிலாவது இப்படிப்பட்டஒருங்கிணைந்த தலைமையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பா.ஜ.கவில் மட்டும்தான் இது நடக்கும்.

தொண்டர்களின் கடும் உழைப்பும், ஓய்வில்லாத பணியுமே பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்கு முழுக் காரணம்.

தமிழகத்தில் அதிமுகவுடன் நாங்கள் அமைத்துள்ள கூட்டணி மிகவும் அருமையானது. இந்தக் கூட்டணியின்வெற்றிக்காக ஒவ்வொரு பா.ஜ.க தொண்டரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இந்தக் கூட்டணி பெரும்பாலானஇடங்களில் வெல்லும் என்றார் அத்வானி.

இன்று காலை நிருபர்களிடம் பேசிய அவர்,

தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்போம். பாகிஸ்தானுடன் நட்புறவுக்கு கை நீட்டினாலும் தீவிரவாத விஷயத்தில்விட்டுத் தரவே மாட்டோம். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழகஅரசின் முழு ஒத்துழைப்பும் மத்திய அரசுக்குக் கிடைத்து வருகிறது.

ராகுல், பிரியங்கா போன்ற இளைய தலைமுறைக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர்கள் தேர்தலில் நிற்பதைஎதிர்க்கவில்லை, நாங்கள் எதிர்ப்பது பரம்பரை அரசியலைத்தான் என்றார்.

அதிமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்த பா.ஜ.க இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளதே. ஜெயலலிதாவைப் பாராட்டி பேசும்போது எப்படி உணர்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது,பழைய அனுபவங்களில் இருந்து எல்லோருமே பாடம் கற்றுக் கொள்கிறோம், நான் உள்பட. இப்போதுஅதிமுகவுடன் இணைந்து வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்று பதில் தந்தார்.

நீங்களும் ஜெயலலிதாவும் கூட்டணி அமைத்துக் கொண்டு பிரதமர் வாஜ்பாயை ஓரம் கட்ட முயல்வதாக கருணாநிதிகூறியிருக்கிறாரே என்று கேட்டபோது, எனக்கும் வாஜ்பாய்க்கும் இடையே பிளவை உருவாக்க 6ஆண்டுகளாகவே முயற்சி நடக்கிறது. அந்த முயற்சி வெல்லாது என்றார் அத்வானி.

இதே கோயம்புத்தூர் நகரில் 1998ம் ஆண்டு நான் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில்பலியான 58 பேரின் குடும்பத்தினருக்கும் மீண்டும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அத்வானியின் வருகையையொட்டி கோவை நகரில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்றுஅத்வானியின் வருகையையொட்டி பல்வேறு பள்ளிகள் பகல் 12 மணியுடன் மூடப்பட்டன. மூடப்படாதபள்ளிகளிலும் கூட தங்கள் குழந்தைகளைபெற்றோர் பாதியிலேயே அழைத்துச் சென்றுவிட்டனர்.

இன்றும் அத்வானி கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் பெருந்துறையில் அதிமுக வேட்பாளருக்குஆதரவாக பிரச்சாரம் செய்துவிட்டு அவர் தர்மபுரி வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது. தர்மபுரியில் பேசிய அவர்,

வரும் தேர்தலில் அதிமுக-பா.ஜ.க. கூட்டணி பெரும் வெற்றி பெறப் போவது உறுதி என்றார். இந்தத் தொகுதிபா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக காலையில் அத்வானி கோவையில் பிரச்சாரம் செய்ததால் பெரும்பாலான பெற்றோர் தங்கள்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. கடந்தமுறை அத்வானி வந்தபோது ஏற்பட்ட குண்டு வெடிப்பு பயம்காரணமாக மக்கள் மத்தியில் இன்றும் பெரும் அச்சம் நிலவியது. ஆனால், எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றிஅவரது கோவை பயணம் முடிவடைந்தது.

கோவையில் இருந்து கிளம்பிய அத்வானியின் ரதத்துக்கு முன்னால் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும்ஜாமர்கள் கொண்ட ஹை-டெக் கார்கள் சென்றன.

அத்வானி வருகையையொட்டி அவினாசி, பெருந்துரை, ஈரோடு ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருநத்து. அத்வானி வரும் பாதையில் உள்ள பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிலஇடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும்அவதியுற்றுள்ளனர்.

இந்தப் பகுதிகள் வழியாக பயணம் செய்த அத்வானி பின்னர் தர்மபுரி வந்து சேர்ந்தார். மாலையில் அவர்பெங்களூருர் வருகிறார். பெங்களூரில் நேசனல் கல்லூரி மைதானத்தில் இன்றிரவு அவர் பொதுக் கூட்டத்தில்பேசுகிறார். இதையடுத்து பெங்களூரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+