தேர்தல் பிரச்சாரம்: கூட்டம் சேராததால் அமைச்சர் மீது ஜெ. பாய்ச்சல்
சென்னை:
மதுராந்தகம், வேலூர் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எதிர்பாத்த அளவுக்குக் கூட்டம் இல்லாததால்கைத்தறித் துறை அமைச்சர் சோமசுந்தரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா செமையாக டோஸ் விட்டார்.
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து ஜெயலலிதா உளவுத்துறைபோலீஸார் மூலம் ரகசிய கருத்துக் கணிப்பு நடத்தினார். கருத்துக் கணிப்பு முடிவில் அதிமுகவுக்கு 5 இடங்கள்தான்கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் அதிருப்தியடைந்த ஜெயலலிதா தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களைஅழைத்து, எப்படியாவது அதிமுக 30 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதற்கான வேலைகளைப்பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று எச்சரித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி சென்னையில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம்இல்லாததால் அமைச்சர் ஜெயக்குமாரை அழைத்து கடுமையாகக் கண்டித்தார். அதே நிலைதான் மதுராந்தகம்,வேலூர் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டது போதும் தொடர்ந்தது.
நேற்று முன்தினம் நேரமின்மை காரணமாக பிரச்சாரம் செய்யாமல் போன ராணிப்பேட்டை, ஆற்காடு,மேல்விஷாரம் ஆகிய இடங்களில் ஜெயலலிதா நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்தப் பகுதிகளிலும்கூட்டம் குறைவாகவே இருந்தது.
மேல்விஷாரம் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். முதல்வரின் மீது முஸ்லீம் சமூகத்தினருக்கு உள்ளஅதிருப்தி காரணமாகவே இங்கு கூட்டம் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி தேர்தல்பொறுப்பாளர் அமைச்சர் சோமசுந்தரத்துக்கும் செம டோஸ் விழுந்தது.
கூட்டமே இல்லாத இடங்களில் எல்லாம் உங்களை யார் அழைத்துப் போகச் சொன்னது? தெருத் தெருவாகபிரச்சாரம் செய்ய இதென்ன சட்டசபைத் தேர்தலா என்று செம டோஸ் கிடைத்ததாம் அமைச்சருக்கு. இத்தனைக்கும்அமைச்சர் வேன் பிடித்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
தேர்தல் முடிந்ததும் சோமசுந்தரத்தின் பதவி பறி போகும் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.இதனையடுத்து இப்போது மற்ற அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குப் பறந்துள்ளனர்.எப்பாடுபட்டாவது கூட்டத்தைச் சேர்க்கவும், தொண்டர்களை உசுப்பி விடவும் முனைந்துள்ளனர்.
அமைச்சர்கள் அனைவரும் கூட்டம் சேர்க்கும் வேலைக்குப் போய்விட்டதால் தலைமைச் செயலகம் வெறிச்சோடிபோயுள்ளது. தேர்தல் முடியும்வரை நிர்வாகம் தொடர்ந்து ஸ்தம்பிக்கும் என்று தெரிகிறது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது











Click it and Unblock the Notifications