ஆபத்தான பாதையில் கருணா: புலிகள் எச்சரிக்கை
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவிடுதலைப் புலிகள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் புலிகள் ஆதரவு இணையதளத்தில் கூறியிருப்பதாவது:
கருணாவின் ஆதரவாளர்கள் படிப்படியாக அவரை விட்டு விலகி எங்களுடன் இணைந்து வருகின்றனர். இப்போதுஅவருடன் இருப்பவர்களாலேயே அவருக்கு ஆபத்து உள்ளது. ரத்தம் சிந்தாமல் மட்டக்களப்பு, அம்பாறைபகுதிகளை மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
இயக்கத்தின் சட்ட திட்டங்களை மறுத்து வருவதன் மூலம் ஆபத்தான பாதையில் கருணா செல்கிறார் என்றுகூறியுள்ளார்.
புலிகளுக்கு நார்வே, இலங்கை அரசு ஆதரவு
இந் நிலையில், தன்னுடன் புதிய அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்படி கருணா விடுத்த கோரிக்கையைஇலங்கை அரசு நிராகரித்துள்ளது. அதேபோல் பிரபாகரனைச் சந்திக்க சென்றுள்ள நார்வே தூதர் எரிக்சோல்ஹைம் கிளிநொச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, கருணாவைச் சந்திக்கப் போவதில்லை என்றும்,புலிகளின் இயக்கத்தின் உள் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை என்றும் கூறினார்.
பிளவு காரணமாக புலிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளக்கூடாது என்பதை எரிக் சோல்ஹைம் பிரபாகரனிடம்வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாகரனை சந்திக்க நிபந்தனை போடும் கருணா
இதற்கிடையே கருணா பிரபாகரனை நிபந்தனைகளுடன் சந்திக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருணாவின் செய்தித் தொடர்பாளர் வரதன் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,
பிரபாகரனைச் சந்தித்துப் பேசுவதில் கருணாவுக்கு தயக்கம் ஏதுமில்லை. பிரபாகரன் தலைமையின் கீழ் வராமல்எமது பிரிவு தனித்துச் செயல்பட அனுமதிக்க வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்றால் சந்திப்பதில் பிரச்சனைஏதுமில்லை என்றார்.
புலிகளுக்கிடையே மோதல் ஏற்படக் கூடாது என்பதற்காக இலங்கை கத்தோலிக்க பிஷப் கிங்ஸ்லி சுவாமி பிள்ளைஎடுத்து வரும் சமாதான முயற்சியின் விளைவாக இந்தத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 15 ஆயிரம் துருப்புகள் உள்ளபுலிகள் இயக்கத்தில் 40 சதவீதப் படை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக கருணா தரப்பு கூறுகிறது.
கருணாவைச் சந்திப்பது குறித்து புலிகள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications