சி.பி.ஐ. வலையில் சிக்கும் தமிழக கலப்பட பெட்ரோல் மன்னன்!
- காதர் கான் & அறிவழகன்
சென்னை:
சி.பி.ஐ. விரித்துள்ள வலையில் தமிழகத்தின் மிகப் பெரிய கலப்பட பெட்ரோல் மன்னன் விரைவில் சிக்குகிறார்.
இந்தியா முழுவதும் நேற்று சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கலப்பட பெட்ரோல் விற்பனைகுறித்த பல ரகசியங்கள் பகிரங்கமாகி உள்ளன. போலி முத்திரைத் தாள் விற்பனை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள பெங்களூரின் அப்துல் கரீம் தெல்கியும் இதில் சிக்கியுள்ளார்.
தமிழகத்திலும் கலப்பட பெட்ரோல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி அமோகமாக விற்பனை செய்து வந்த தன பலம்மிகுந்த முக்கியப் புள்ளியும் இதில் மாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் புள்ளி நாடார் சமுதாயத்திலும் முக்கியமானவராக விளங்குவதால்தேர்தல் நேரத்தில் அவரைக் கைது செய்யாமல் வெறுமனே விசாரணையை மட்டுமே சிபிஐ அதிகாரிகள்நடத்தியுள்ளனர்.
தற்போது சென்னையில் வாசம் செய்து வரும் அந்த நபர் சில சினிமாக்களையும் தயாரித்துள்ளார். அவரது முக்கியபிசினஸே கலப்படம்தான். அவர் கலப்படம் செய்யாத பொருளே இல்லை எனும் அளவுக்கு சகட்டு மேனிக்குகலப்பட பிசினசில் கொடி கட்டிப் பறந்து வருகிறார்.
அவரது கலப்பட பிசினஸில் முக்கியப் பொருட்கள் டீத்தூளும், பெட்ரோலும்தான். சென்னை நகரில் மட்டும்அவருக்குச் சொந்தமாக 3,500 டேங்கர் லாகள் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் சுமார் 10,000டேங்கர் லாரிகளை அவர் வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் சென்னை நகரில் அவருக்குச் சொந்தமாக 50 பெட்ரோல் பங்குகள் உள்ளனவாம்.
சென்னை ஈக்காட்டுத் தாங்கல் பகுதியில் அவரது பிசினஸ் அலுவலகம் உள்ளது. ஆனால் ரகசியதொழில்களுக்கான ஆலோசனை அலுவலகம் கொட்டிவாக்கத்தில் உள்ளதாம். சென்னை நகரில் அந்தபிரபலத்துக்கு மொத்தம் 8 பெரும் பங்களாக்களும் உள்ளன.
கலப்பட பெட்ரோலை தனது டேங்கர் லாரிகள் மூலம் தமிழகம் மட்டுமல்லாது கேரளம், ஆந்திரா மற்றும்கர்நாடகத்திற்கும் அந்த பிரபலம் ஹோல்சேல் சப்ளை செய்கிறார். அத்தோடு வெளி மாநிலங்களிலும் அவருக்குபெட்ரோல் பங்க்குகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
பெட்ரோலைப் போலவே, டீத் தூள் கலப்படத்திலும் இவர்தான் தமிழகத்திலேயே நம்பர் ஒன்.
அவரது கலப்பட டீத் தூளை வினியோகிக்க மிகப் பெரிய டீமையே வைத்துள்ளாராம். தமிழகத்தில் உள்ளஅனைத்து மளிகைக் கடைகளிலும் அவரது கலப்பட டீத்தூள் கிடைக்கும் என்ற அளவுக்கு மிகப் பெரிய வியாபாரசாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறாராம்.
திமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்த இந்தப் பிரபலம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுகவுக்கு மாறுவதற்குதூது விட்டாராம். ஆனால் அம்மாவின் ஆசி இவருக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தும்தொடர்ந்து அவர் முயன்றுள்ளார்.
ஆனால் அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைக்காததால், மறுபடியும் திமுக அனுதாபியாக மாறிவிட்டார்.
இதனால் கடுப்பான ஆட்சியாளர்கள் தரப்பு சில மாதங்களுக்கு முன்பு இவரை கைது செய்ய நடவடிக்கையில்இறங்கியது. பயந்து போன பிரபலம், உடனடியாக பொருளாதாரரீதியில் சிலவற்றை அனுப்ப வேண்டியஇடத்துக்கு அனுப்பி வைத்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பினாராம்.
தற்போது சிபிஐ வலையில் மாட்டியுள்ளது கூட, ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மத்திய உள்துறை மூலமாககொடுக்கப்படும் நெருக்கடியாகத்தான் இருக்கும் என்று பிரபலத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
இவரைக் கைது செய்து விசாரித்தால் முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கியையே தூக்கிச்சாப்பிடக் கூடிய அளவுக்கு மேட்டர் கிடைக்கும் என்கிறார்கள் மத்திய உளவுப் பிரிவினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications