திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தை காலி செய்ய நீதிபதி அதிரடி உத்தரவு
திருச்சி:
திருச்சியில் 114 ஆண்டுகளாக இயங்கி வந்த வழக்கறிஞர்கள் சங்க அலுவலகக் கட்டடத்தை 2 நாட்களில் காலிசெய்யுமாறு திருச்சி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தாயாரம்மாள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சியில் மாவட்ட நீதிமன்றம், துணை நீதிமன்றங்கள் இயங்கி வரும் நீதிமன்ற வளாகத்தில் பெரும் இடநெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து போதிய இட வசதி கோரி வழக்கறிஞர்கள் கடந்த 4ம் தேதி மரத்தடியில்அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து மாவட்ட நீதிமன்றம் காவல்துறையிடம் புகார் கொடுத்தது. இதைத் தொடர்ந்து 25 வழக்கறிஞர்கள் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தச் சூழ்நிலையில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தை இன்னும் 2 நாட்களில் காலி செய்ய வேண்டும்என்று மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தாயாரம்மாள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால்வழக்கறிஞர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த 114 ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் இயங்கி வந்த கட்டடத்தை 2 நாட்களில் காலிசெய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளது தங்களுக்குப் பெரும் அதிர்ச்சி தருவதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.மேலும் இங்குள்ள ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சட்டப் புத்தகங்களை எங்கு கொண்டு செல்வது என்றும் அவர்கள்குழம்பியுள்ளனர்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications