திமுக, அதிமுக மீதான குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் விசாரணை
சென்னை:
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மீது கூறப்பட்டிருக்கும் புகார்களைத் தேர்தல் ஆணையம்விசாரிக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அதிமுக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கிவிமர்சனங்கள் கூறப்பட்டுள்ளதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து அதிமுக தேர்தல் அறிக்கையின் நகலைக்கேட்டுள்ளோம்.
அதே போல் வாக்காளர்களுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸ், தட்டு பரிசளித்ததாக திமுக மீது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகுறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்விரு விஷயங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் நிச்சயம்நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேர்மையான முறையில் தேர்தலைநடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைநீக்கும் பொருட்டு ஒரு ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டு உள்ளது என்றார்.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தேர்தலை பண பலமும், படை பலமும் ஆட்டிப் படைக்கிறது. யாராக இருந்தாலும்தேர்தல் நடத்தை விதிமுறை மீறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications