கோவில், பள்ளி வாசல்களில் பிரச்சாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம்
சென்னை:
கோவில் மற்றும் பள்ளி வாசல்களில் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவில், சர்ச், பள்ளிவாசல்கள், குருத்துவராக்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. அரசுக்குச் சொந்தமானமின்கம்பங்கள், தொலைபேசிக் கம்பங்கள் மீது விளம்பர தட்டிகள் கட்டவோ, கொடிகள், தோரணங்கள் கட்டவோகூடாது.
மற்ற கட்சியினரை விமர்சிக்கும்போது அவர்களது கொள்கைகள் மற்றும் திட்டங்களை மட்டுமே விமர்சிக்கவேண்டும். தனிநபர் விமர்சனங்களோ பொதுவாழ்க்கைக்குத் தொடர்பில்லாத செயல்பாடுகளையோ விமர்சிக்கக்கூடாது. ஊர்வலத்தின்போது கொடும்பாவி கொண்டு செல்வதோ, எரிப்பதோ கூடாது.
தேர்தல் முழுவதும் வேட்பாளர் ஒரே காரையே பயன்படுத்த வேண்டும். முக்கிய தலைவர்களின் வருகையின்போதுபோடப்படும் மரத்தாலான தடுப்புச் சுவர் அமைக்கும் செலவை அரசியல் கட்சிகளே ஏற்க வேண்டும்.
பொதுக்கூட்டம் நடத்தும்போது உரிய அனுமதியை போலீஸாரிடம் முன்கூட்டியே பெற வேண்டும். பொதுக்கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துபவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நேரடியாக யாரும் மேற்கொள்ளக்கூடாது. பல்வேறு சாதி, மதத்தினரிடையே மோதல் ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றுகூறப்பட்டுள்ளது.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications