தேர்தல் விதியை திமுக மீறவில்லை: ஸ்டாலின் விளக்கம்
செங்கல்பட்டு & வேலூர்:
திமுக கட்சி தேர்தல் விதியை மீறவில்லை என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆயிரம் விளக்கு சட்டப் பேரவை தொகுதியில் எவர்சில்வர் டிபன் பாக்ஸ்களையும், தட்டுகளையும் திமுகவழங்கியதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1989ம் ஆண்டு முதல்ஆயிரம் விளக்கு பகுதியில் பொங்கல் விழா வட்டங்கள் தோறும் நடத்தப்படுகிறது. அப்போது நடத்தப்படும்விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறு சிறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல்தான் இந்த ஆண்டும் வழங்கப்பட்டது. அதுவும் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எஞ்சியிருந்த விழாக்கள்ரத்து செய்யப்பட்டு விட்டன. எனவே இதில் தேர்தல் நடத்தை விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றுகூறியுள்ளார்.
மூர்த்தியை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்
செங்கல்பட்டு தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர்ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஸ்டாலின் செங்கல்பட்டில் பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசுகையில், ரயிலில் ஏற மறந்தாலும் மறக்கலாம், ஆனால் ஏராளமான ரயில்களை விட காரணமாக இருந்தஏ.கே.மூர்த்தியை செங்கை மக்கள் மறந்து விடக் கூடாது.
செங்கை தொகுதிக்கு நன்கு அறிமுகமானவராக இருந்த ஏ.கே.மூர்த்தி இன்று தமிழகம் முழுவதும் அறிந்தமனிதராகி விட்டார். அவரது பதவிக்காலத்தின்போது பல ரயில்வேத் திட்டங்களை தமிழகத்திற்காக நிறைவேற்றியபெருமை அவருக்குண்டு.
மீண்டும் அவரை எம்.பியாகத் தேர்ந்தெடுத்து எதிர்காலத்தில் மேலும் பல நல்ல பணிகளை தமிழகத்திற்கு ஆற்றசெங்கை மக்கள் உதவ வேண்டும் என்றார் அவர்.
உதயசூரியன் சின்னத்தில் முஸ்லீம் லீக்
இதற்கிடையே வேலூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் காதர் மொய்தீன் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், எங்களுக்கு என்று தனிச் சின்னம் இல்லாததால், எங்கள் கட்சியின்அகில இந்திய தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்க உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications