யாரும் விரல் வெட்ட வேண்டாம்: ஜெ. வேண்டுகோள்
சென்னை & திருவண்ணாமலை:
தேர்தல் வெற்றிக்காக அதிமுகவினர் யாரும் தங்கள் விரல்களையோ, உடல் உறுப்புகளையோ வெட்டிகாணிக்கையாக அளிக்க வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலதா கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் சேலத்தைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு ரத்னம் என்பவர் தனது கையின் 3 விரல்களை அதிமுக வெற்றிக்காககோவிலில் வைத்துத் துண்டித்துக் கொண்டார். இந்த சம்பவத்தின் பரபரப்பு மறைவதற்குள் திருநெல்வேலியில் ஒருஅதிமுக தொண்டர் தனது இரண்டு விரல்களைத் துண்டித்துக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். சமையல்காரராகவேலை பார்த்து வருகிறார். சனிக்கிழமை பிற்பகல் இசக்கியம்மன் கோவிலுக்கு சென்ற கணேசன், அங்குஅரிவாளால் தனது 2 கை விரல்களைத் துண்டித்துக் கொண்டார்.
இந் நிலையில், அதிமுக தலைமை நிலையம் திருவண்ணாமலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விரல்களை வெட்டிக் கொண்ட கணேசனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவை அதிமுக ஏற்கும். ஜெயலலிதாகொண்ட அளவற்ற பற்றுதல் காரணமாக தங்களது பாசத்தையும், விசுவாசத்தையும் காட்டும் வகையில்அதிமுகவினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தங்களது உடலை வருத்துவதையோ, ஊனப்படுத்துவதையோ தவிர்க்குமாறு ஜெயலலிதா பலமுறை ஜெயலலிதாஅறிவுறுத்தி வந்துள்ளார். ஆனால் இத்தகைய செயல்கள் தொடர்வது அவருக்கு மிகுந்த வேதனையைஅளித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தம்பித்துரைக்கு புதிய பொறுப்பு
வந்தவாசி தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழுவில் திண்டுக்கல் சீனிவாசனும், கரூர் தொகுதி தேர்தல்பணிக்குழுவில் தம்பித்துரையும் சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசனுக்கு அவரது சொந்தத் தொகுதியான திண்டுக்கல்லைக் கொடுக்காமல் அதிர்ச்சி வைத்தியம்அளித்தார் ஜெயலலிதா. இந் நிலையில் அவரை தேர்தல் பணிக்குழுவில் சேர்த்துள்ளார். அதேபோல,தம்பித்துரைக்கும் தேர்தல் பணிக்குழுவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications