சீர்காழி: தேர்தலுக்காக ஒரு படகு பயணம்
சீர்காழி:
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மயிலாடுதுறை தொகுதியின் கீழ் வரும் கோடியம்பாளையம் தீவுஅரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள இந்த சிறு தீவில் 500 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். சீர்காழி அருகே உள்ள இந்தத் தீவுசுற்றிலும் நீரால் சூழப்பட்டது. ரம்யமான அழகுடன் காணப்படும் கோடியம்பாளையத்திற்கு கொள்ளிடத்திலிருந்துபடகு மூலம் மட்டுமே செல்ல முடியும்.
பெரும்பாலும் தேர்தல் போன்ற அதிமுக்கியமான நேரங்களில் மட்டும்தான் இந்த குக்கிராம தீவு மக்கள்அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கவனத்திற்கு வருவார்கள். அதுபோல தற்போது நாடாளுமன்றத் தேர்தல்நெருங்கி வருவதால் கோடியம்பாளையம் ரவுண்ட் அப்பை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்தொடங்கியுள்ளார்கள்.
நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரசண்முகமணி தலைமையிலான அதிகாரிகள் படகு மூலம்கோடியம்பாளையம் சென்று அங்கு தேர்தல் தொடர்பான பணிகளை மேற்பார்வையிட்டார்கள்.கோடியம்பாளையம் பகுதி மக்களை சந்தித்த ஆட்சித் தலைவர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்துவிளக்கினார். தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதில் இங்குள்ள வாக்காளர்களிடையே தெளிவான கருத்து இல்லை என்றபோதிலும் காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர அய்யருக்கு இவர்களிடையே நல்ல பெயர் உள்ளது.
அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் கட்சியினர் புடைசூழ இங்கு சென்று பிரச்சாரம் செய்தார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications