தலைவர்கள் வீட்டு சுவர்கள் "பளீர் பளீர்"!
சென்னை:
சென்னை நகரில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்களது வீட்டுச் சுவர்கள் அனைத்தும் பளிச்சென்றுஇருக்க பொது மக்களின் சுவர்களில் மட்டும் விளம்பரங்களைத் தீட்டி நாஸ்தி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்பல்வேறு கட்சிக்காரர்களும்.
தேர்தல் கலாட்டா ஆரம்பித்து விட்டாலே சுவர் விளம்பரங்கள் ஜொலிக்க ஆரம்பித்து விடும். ஆனால் தேர்தல்ஆணையத்தின் கிடுக்கிப் பிடியால், குண்டக்க மண்டக்க சுவர்களை காலி செய்யும் அரசியல்வாதிகள் விழிபிதுங்கிப் போய் உள்ளனர்.
சுவர்களில் அனுமதி பெற்றுத்தான் விளம்பரங்களை எழுதி வருகிறார்கள். அனுமதி இல்லாமல் எழுதப்படும்இடங்கள் குறித்து, தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் பறந்து வருகின்றன. இதனால் சுவர்களை முன் கூட்டியேரிசர்வ் வைத்தவர்கள் சோர்ந்து போய் உள்ளனர்.
தெரிந்தவர்கள் வீடுகளின் சுவர்களை கேட்டு, மிரட்டி வாங்கி விளம்பரங்களை எழுதும் வேலையில் அனைத்துக்கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு இந்த விளம்பரங்கள் அனைத்தும் பொது மக்கள் வீட்டுச் சுவர்களில்தான் பளிச்சிடுகினறன.
ஆனால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் குறிப்பாக கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின்,ஜி.கே.வாசன் என முக்கியத் தலைவர்களின் வீடுகளின் சுவர்கள் அனைத்தும் பளிச் சென்று விளம்பரங்கள் ஏதும்எழுதப்படாமல் காணப்படுகின்றன.
வேளச்சேரியில் உள்ள ஸ்டாலின் வீட்டுச் சுவர் மிக நீளமானது. அட்டகாசமான வண்ணத்துடன் காணப்படும் அந்தசுவரில் ஒரு பொட்டு கூட விளம்பரம் இல்லை. மாசு, மருவில்லாமல் காணப்படுகிறது.
ஆனால் அதே தெருவில் உள்ள பொது மக்களின் சுவர்களிலும் டி.ஆர்.பாலுவை (தென் சென்னை திமுகவேட்பாளர்) ஆதரிக்கும் விளம்பரங்களை ஆயில் பெயிண்டிங்கள் வரைந்து தள்ளிவிட்டனர் உடன் பிறப்புக்கள்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications