இலங்கை: அமைதி பேச்சை முன்னிறுத்தி ரணில் பிரசாரம்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கலைத்ததையடுத்து, அடுத்த மாதம் 2ம் தேதி தேர்தல்நடைபெறவுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தொடர மீண்டும் தனது தலைமையில் அரசு அமைக்கமக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ரணில் பிரச்சாரம் செய்து வருகிறாார்.பிரசாரத்தில் இடையே இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
கடந்த நான்காண்டுகளில் மக்கள் சந்திக்கும் 3வது தேர்தல் இதுவாகும். நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம்மக்கள் மீது தேர்தலை திணித்தது சந்திரிகாதான். புலிகளுடான அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்வது குறித்தும்,பொருளாதார மேம்பாடும் தான் என் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பெறும்.
விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதில் எங்களது கட்சி ஆர்வமாக உள்ளது. அதற்குஅவர்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தொடர வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அதற்கானமுயற்சிகளைத் தொடர்வோம்.
-1.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி எங்களது ஆட்சியில் 8 சதவீதமாக உயர்ந்தது. இப்போது தேர்தல்திணிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பொருளாதாராத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மைபலத்துடன் வெற்றி பெறுவதன் மூலம் புலிகளுடன் பேச்சுவார்த்தையையும், பொருளாதார வளர்ச்சிக்கானபணிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றார்.
இதற்கிடையே சந்திரிகா, தான் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் புலிகளுடனான பேச்சுவார்த்தையை மீண்டும்தொடர்வேன் என்றும், ஆனால் பேச்சுவார்த்தைக்கான வழிமுறைகளை மாற்றுவேன் என்றும் கூறியுள்ளார்
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications